அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின்
மனைவி விபத்தில்
மரணம்
அகில
இலங்கை ஜம்
இய்யத்துல் உலமா சபையின் பிரதி தலைவரும்
நாடறிந்த பேச்சாளரும்
ஜாமிய நழீமியா
கலாபீடத்தின் பிரதி பணிப்பாளருமான அஷ்ஷெய்ஹ் அகார்
முகம்மட் அவர்களின்
மனைவி சுரையா இன்று
(30.10.2016) விபத்துச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.(இன்ன இலில்லாஹி
வஇன்னா இலைஹி
றாஜிஊன்)
நுவரேலியாவில்
நடைபெற்ற யூசுப்
முப்தியின் நிகழ்வொன்றில் கலந்து விட்டு கொழும்பு
திரும்பிக் கொண்டிருந்த போது கம்பளைக்கும் கெலியோயவுக்கு
மிடையிலுள்ள பிரதேசத்தில் வைத்து இந்த விபத்து
இடம் பெற்றுள்ளதாக
தெரிய வருகின்றது.
இவர்கள்
பயணித்த வாகணத்தை
வீதியோரம் நிறுத்தி
விட்டு பகலுணவுக்காக
அஷ்ஷெய்ஹ் அகார்
முகம்மட் மற்றும்
அதில் பயணித்தவர்கள்
இறங்கிய நிலையில்
மனைவி வாகனத்துக்குள்ளே
இருந்துள்ளார்.
இதன்
போது பின்னால்
வந்த வாகனமொன்று
இந்த வாகனத்தை
அடித்ததில் இந்த விபத்துச் சம்பவம் இடம்
பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
படுகாயமடைந்த
அஷ்ஷெய்ஹ் அகார்
முகம்மட் அவர்களின்
மனைவி உயிரிழந்துள்ளார்.
இவர் மூன்று
பிள்ளைகளின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.