வெற்றி பெற்றால் வெள்ளை மாளிகை

இல்லையென்றால் நீதிமன்றம்

டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு




“மணந்தால் மகாதேவி - இல்லையென்றால், மரணதேவி மகாதேவி படத்தில் வீரப்பா  பாணியில், அமெரிக்க ஜனாதிபதித்  தேர்தலின் முடிவுகள் எனக்கு சாதகமாக அமைந்தால் ஏற்றுக் கொள்வேன், இல்லாவிட்டால் நியாயம்கேட்டு நீதிமன்றம் போவேன் என குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சுமார் 20 நாட்கள் மட்டுமே உள்ளநிலையில் டொனால்ட் டிரம்ப் - ஹிலாரி கிளிண்டன் இடையிலான வாக்குவாதங்களும் மோதல்களும் அதிகரித்து வருகிறது.

இதுவரை மூன்றுமுறை நேருக்குநேர் விவாத நிகழ்ச்சிகளில் இருவரும் காரசாரமாக மோதிக் கொண்டனர்.

இந்நிலையில், ஓஹியோ மாநிலத்தில் உள்ள டெலாவேர் நகரில் நேற்று தனது ஆதரவாளர்களிடையே பேசிய டொனால்ட் டிரம்ப், ‘இன்று உங்களுக்கு எல்லாம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். வரலாற்று சிறப்புமிக்க இந்த தேர்தலில் நான் வெற்றிபெற்றால் ஏற்றுக் கொள்வேன்.


மாறாக, தேர்தல் முடிவுகள் கேள்விக்குரிய வகையில் அமைந்தால் அதை எதிர்த்து சட்டப்படி வழக்கு தொடர்வேன்என குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top