டாக்டர் ஜாகிர் நாயக்கின் தந்தை
அப்துல் கரிம் நாயக் மும்பையில் வபாத்!
பிரபல
இஸ்லாமிய பிரச்சாரகர்
டாக்டர் ஜாகிர்
நாயக்கின் தந்தையான
டாக்டர் அப்துல்
கரிம் நாயக்
நேற்று மும்பையில்
வபாத்தானார். இன்னாலில்லாஹி
வஇன்னா இலைஹி
ராஜிஊன். வபாத்தாகும்போது அவருக்கு வயது
87.
இதேவேளை,
இஸ்லாமிய பிரச்சாரம்
செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர்
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்யச் சென்ற ஜாகிர்
நாயக், இந்தியாவுக்கு
திரும்பி வராமல்
வெளிநாட்டில் தங்கியுள்ளார்.
ஜாகிர்
நாயக்கின் அமைப்புக்கு
தடை விதிக்கப்படலாம்,
அவர் இந்தியாவுக்கு
வந்தால் கைது
செய்யப்படலாம் என்பதுபோன்ற யூக செய்திகள் வெளியாகி
வருகின்றன.
இந்நிலையில்,
ஜாகிர் நாயக்கின்
தந்தையான டாக்டர்
அப்துல் கரிம்
நாயக்(87) நேற்று
அதிகாலை மாரடைப்பால்
மும்பையில் வபாத்தானார். அவரது ஜனாஸா நல்லடக்கம்
மும்பையில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய
மாநிலத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் பிறந்து
மனநல சிகிச்சை
நிபுணராக விளங்கிய
அப்துல் கரிம்
நாயக், முன்னர்
கல்வியாளராக சமூகச் சேவையில் ஈடுபட்டார். மும்பை
மனநல மருத்துவர்கள்
சங்கத்தின் தலைவராகவும் இவர் பொறுப்பு வகித்துள்ளார்.
நேற்று
நடைபெற்ற தந்தையின்
ஜனாஸா நல்லடக்கத்தில்
ஜாகிர் நாயக்
பங்கேற்கவில்லை என அவரது நெருங்கிய நண்பர்
ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment