கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்
ஏ.எல்.எம்.நஸீரின்
காரியாலயத்தில் தீ
கிழக்கு
மாகாண சுகாதார
அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின்
காரியாலயத்தில் இன்று 20 ஆம் திகதி வியாழக்கிழமை திடீரென்று
தீ பரவியதால், ஏ.சி இரண்டும் தரைவிரிப்புகளும்
தீக்கிரையாகியுள்ளன.
திருகோணமலை
நகரில் அமைந்துள்ள
குறித்த அமைச்சரின்
உத்தியோகபூர்வ காரியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த
ஏ.சி ஒன்றில் ஏற்பட்ட
மின்னொழுக்குக் காரணமாக தீ பரவியதாக மாகாண
சுகாதார அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
தனது
காரியாலயத்தில் தீ பரவிய வேளையில் காரியாலயத்தில்
தான் இருக்கவில்லை
என்பதுடன், சர்வதேச முதியோர் தின நிகழ்வுக்கு
தான் சென்றிருந்ததாகவும்
அவர் கூறியுள்ளார்.
இச்சம்பவத்தை
கேள்விப்பட்ட தான் சம்பவ இடத்துக்குச் சென்று
தீயை அணைப்பதற்கான
நடவடிக்கையை முன்னெடுத்து தீயை அணைத்ததாகவும் அவர்
கூறியுள்ளார்






0 comments:
Post a Comment