ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட
அவரது உடல்நிலை இல்லையாம்

கைநாட்டு தான் வைத்துள்ளாராம்..தேர்தல் கமிஷனின் ஆதாரம்

ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
1989-ம் ஆண்டில் இருந்து அதிமுகவில் இந்த FORM-Bல் கையெழுத்துப்போடும் நபர் ஜெயலலிதாதான். மூன்று தொகுதிகளில் நிறுத்தப்பட்டு இருக்கும் அதிமுக வேட்பாளர்களுக்கு FORM-B தரப்பட்டு இருக்கிறது.இந்த FORM-Bல் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது.ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் P.பாலாஜி,இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார்.அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து போட்டு இருக்கிறார்.

கையொப்பம் இடப்பட்ட நபர் தற்போது கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருக்கிறார். tracheostomy செய்து இருப்பதால்,அவ்ரது வலது கையில் கையெழுத்து இடமுடியாத நிலையில் இருக்கிறார்.ஆதலால் அவரது இடது கை கட்டைவிரலின்  பதிவினை பெற்று இருக்கிறோம் என குறிப்பிடபட்டு இருக்கிறது.

ஜெயலலிதா கையெழுத்துபோடும் நிலையில்கூட அவரது உடல்நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top