வெளியானது யாழ் மாணவர்களின் மரணத்திற்கான

உண்மையான காரணம்

யாழ் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் இரு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கொலையா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மாணவர்களின் மரணத்திற்கான பிரேத பரிசோதனை அறிக்கை யாழ்.நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிபதி மாணவர்களிடம் கலந்துரையாடி உள்ளார்.

இதன்படி, மோட்டார் சைக்கிளை ஓட்டிய மாணவன் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்றைய மாணவன் விபத்தில் உயிரிழந்துள்ளார் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றதிலிருந்து தற்போது வரை பலதரப்பட்ட கருத்துக்கள் வெளிவந்தன. இருப்பினும் இந்த இளைஞர்களின் மரணத்திற்கு விபத்து காரணம் இல்லை என்றும், இவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

கலைப்பீடத்தில் 3 ஆம் வருடத்தில் கல்வி கற்கும் 155 ஆம் கட்டை கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ் சுலக்ஸன் (வயது 24) ஆகிய மாணவர்களே, இச்சம்பவத்தின் மூலம் உயிரிழந்துள்ளனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top