அர்ஜுன் மகேந்திரன் நாடு திரும்பினார்
Arjuna Mahendran returns
சிங்கப்பூர் சென்றிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்று நாடு திரும்பியுள்ளார்.
மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த அர்ஜுன் மகேந்திரன் கோப் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
இதனை நாடாளுமன்ற அமர்வின்போது இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து “கோப் அறிக்கைக்கு பயந்து நாட்டை விட்டு ஓடி விட்டார் அர்ஜூன்” என கூட்டு எதிர்க்கட்சியினர் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் சரியாக ஒருவாரம் கழித்து இன்று அர்ஜுன் மகேந்திரன் நாடு திரும்பினார்.
அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்யப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் பல உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பிய இதே சந்தர்ப்பத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஹொங்கொங் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment