சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள்

சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் மரணம்



சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகள் லண்டனில் காலமாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளான சன்ஞீவனி இந்திரா ஜயசூரிய லண்டனில் காலமாகியுள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 40

செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி மற்றும் தேவி பாலிகா வித்தியாலயத்தின் பழைய மாணவியான அவர், பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்திற்கான கற்கையில் இளங்கலை பட்டம் பெற்றதோடு லண்டன் பொருளாதார பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டத்தை பெற்றுள்ளார்.
அவர் பல முன்னணி நிதி நிறுவனங்களில் சந்தைப்படுத்தல் பிரிவு சிரேஷ்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தாயான இவர், பிரித்தானிய பிரஜையொருவரை திருமணம் முடித்து அந்த நாட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மரண சடங்குகள் லண்டனில் இடம்பெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


Karu Jayasuriya’s daughter passes away

Sanjeewani Indira Jayasuriya, a daughter of Speaker Karu Jayasuriya, has passed away at the age of 40.
The mother of two, who is married and living in England, had passed away after a long battle with cancer, according to sources close the family.

Sanjeewani, who is the veteran politician’s second daughter, had passed away on Wednesday (2) and is expected to be laid to rest in England.
Family members including Speaker Karu Jayasuriya have already reached the country, according to reports.











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top