தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விட்டார்

அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரெட்டி பேட்டி



தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து விட்டார். எப்போது வீடு திரும்புவார் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என, சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா செப்., 22ம் திகதி முதல், 40 நாட்களுக்கு மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி கூறியிருப்பதாவது:
ஆச்சரியப்படும் வகையில் முதல்வர் ஜெயலலிதா, வேகமாக குணமடைந்து வருகிறார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரார்த்தனைகள், லண்டன் டாக்டர், டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ குழு ஆகியோர் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட சிகிச்சைகளால் தான் இது சாத்தியமானது.

தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனபதை ஜெயலலிதா நன்கு உணர்ந்து உள்ளார். எப்போது வீடு திரும்ப வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் எப்படிப்பட்டவர் என்பது உங்களுக்கே ( பத்திரிகையாளர்கள்) தெரியும். இவ்வாறு பிரதாப் சி ரெட்டி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top