பனிப்பாறை சரிந்து நட்சத்திர
ஹொட்டல் இடிந்தது
2 பேர் பலி 30 பேர் இடிபாடுகளில் சிக்கி காணவில்லை
இத்தாலியில்
பனிப்பாறை சரிந்து நட்சத்திர ஹொட்டல் இடிந்து 2 பேர் பலியாகினர். 30 பேர் இடிபாடுகளில்
சிக்கி தவிக்கின்றனர்.
இத்தாலியில்
அப்ருஷ் ஷோ
மாகாணத்தில் கிரான் சாஸ்சோ மலைப்பகுதி உள்ளது.
தற்போது குளிர்
காலம் என்பதால்
அப்பகுதி முழுவதும்
பனி உறைந்து
காணப்படுகிறது.
இந்த
நிலையில் நேற்று
அப்பகுதியில் 4 தடவை நில நடுக்கங்கள் ஏற்பட்டன.
அச்சம்பவம் நடந்த ஓரிரு மணி நேரத்தில்
கிரான் சாஸ்கோ
மலைப்பகுதியில் இருந்த பனிப்பாறைகள் சரிந்தன.
மலையின்
அடிவாரத்தில் 4 நட்சத்திர சொகுசு ஹொட்டல் உள்ளது.
பனிப்பாறை சரிந்ததில்
அந்த ஹொட்டல்
இடிந்தது.
இதனால்
ஹொட்டலில் தங்கியிருந்தவர்கள்,
ஊழியர்கள் இடிபாடுகள்
மற்றும் ஐஸ்
பாறை கட்டிக்குள்
சிக்கி தவிக்கின்றனர்.
தகவல் அறிந்ததும்
மீட்பு குழுவினர்
அங்கு விரைந்தனர்.
இடிபாடுகளில்
சிக்கி தவித்தவர்களை
மீட்கும் பணியில்
ஈடுபட்டனர். இதற்கிடையே இடிபாடுகளில் இருந்து 2 உடல்கள்
மீட்கப்பட்டன.
அதே
நேரத்தில் 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அந்த
ஹொட்டல் முழுவதும்
இடிந்து தரை
மட்டமாகி விட்டது.
எனவே அங்கு
இருந்தவர்களில் பெரும்பாலானோர் பலியாகி இருக்கலாம் என
அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment