அமரிக்காவின் ஜனாதிபதியாக
இன்று பதவியேற்கிறார் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்க உள்ள டொனால்ட் டிரம்ப்பை ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர்.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு , டிரம்ப் நேற்று இரவு தனது குடும்பத்தாருடன் வெள்ளை மாளிகையின் அருகே உள்ள ஃப்ளேர் ஹவுஸில் தங்கினார்.
அதற்கிடையில் அவர் நேற்று லிங்கன் மெமோரியல் ஹாலில் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக வரவேற்றனர். இதில் இசை நிகழ்ச்சிகள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதில் டிரம்ப் குடும்பத்தார் கலந்து கொண்டனர். ஆனால் அவர் மகன் Barron இதில் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய டிரம்ப், இந்த தருணத்தில் தனது மனைவி Melania விக்கு நன்றி சொல்வதற்கு கடமை பட்டுள்ளதாகவும், அவர் ஒரு கடவுள் என்றும் புகழ்ந்து தள்ளினார்.
இதனால் அரங்கே கலைகட்டியது. அதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு புனித ஜான் எபிஸ்கோயல் தேவாலயத்தில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சரவையில் இடம்பெறுவோர் பங்கேற்கிறார்கள்.
டிரம்ப் - ஒபாமாபின்னர் காலை 9.30 மணிக்கு வெள்ளைமாளிகையின் தெற்கு போர்டிகோவில் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறப்பு தேநீர் விருந்தளிக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் டிரம்ப், துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் பென்ஸ் ஆகியோரை ஒபாமா, விழா நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் செல்வார். அமெரிக்க நேரப்படி காலை 11 மணியளவில் பதவியேற்வு விழா தொடங்கும்.
சரியாக நண்பகல் வாக்கில் ஜனாதிபதியாக டிரம்ப், துணை ஜனாதிபதியாக பென்ஸ் மற்றும் அமைச்சர்கள் பைபிள் மீது ஆணையிட்டு, பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க காங்கிரஸ் குழு உறுப்பினர்களுடன் டிரம்ப் மதிய உணவு விருந்தில் பங்கேற்பார். பின்னர் ஜனாதிபதியாக முதல் உரை நிகழ்த்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The inauguration will begin
Friday at the Capitol, where Trump will take the oath of office and end at the
White House
|
Trump and Melania will be driven by a US Secret
Service-trained chauffeur inside a maximum-security vehicle
|
0 comments:
Post a Comment