எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை

அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிப்பு.

உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.
குழுவின் அனைத்து உறுப்பினர்களும் இதில் கைச்சாத்திட்டிருப்பதாக குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மீளாய்வு குழுவின் அறிக்கையில் தட்டச்சுத் தொடர்பான பிழைகளை சரிபார்த்தவுடன்  விரைவில் எல்லை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். ஜனவரி மாத இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும்,
அமைச்சர் தெரிவித்தார்;.
வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஆகக் குறைந்தது 55 நாட்களிலிருந்து 72 நாட்களுக்குள் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு உறுப்பினர்கள் இருவரின் கையொப்பமின்றி அறிக்கையை கையேற்காமை குறித்து ஊடகங்களும், அரசியலில் செலவாக்கிழந்தவர்களும் விமர்சித்திருந்தமை குறித்து தான் கவலையடையவில்லையென சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த அரசாங்கம் இழைத்த தகவறுகளுக்குப் பொறுப்பேற்று அதற்கான வீண் பழிகளைத் தாம் சுமக்கவேண்டி ஏற்பட்டதாகவும் கூறினார்.
குழுவின் தலைவர் அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில் :
எல்லை நிர்ணயம் குறித்த மீளாய்வு குழுவின் அறிக்கை மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டிருப்பதுடன், அதனை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடுவதற்கான வகையில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதுமீளாய்வுக்கு உள்ளாகும் வட்டாரங்கள் அல்லது தொகுதிகள் குறித்தே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். மக்கள் இலகுவாக புரிந்துகொள்ளக் கூடிய வகையில் சகல வட்டாரங்களையும் உள்ளடக்கியவகையிலும் அறிக்கையொன்றை தயாரித்துள்ளோம். எல்லை நிர்ணயம் குறித்த 45 புத்தகங்கள் தனித்தனியாகக் காணப்படுவதுடன், அவை மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதிலும் நிர்வாக ரீதியான பணிகளை பூர்த்திசெய்ய வேண்டியிருப்பதால் மீளாய்வுக்காக திறக்கப்பட்ட அலுவலகம் சில காலம் செயற்படுமென்று தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top