தேசிய பூங்காக்கள் வனசீவராசிகள் சரணாலயங்கள்
எல்லைகளை மீளமைப்பதற்கு
இந்நாட்டில் நாள்தோறும் அதிகரித்துக் காணப்படும் மனித செயற்பாடுகள் காரணமாக உயிர் பல்வகைமைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதுடன் இந்நாட்டின் வனாந்தரங்கள் படிப்படியாக குறைவடைந்து செல்கின்றன.
இந்நிலைமையினை கருத்திற் கொண்டு, சரணாலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கலாவௌ, கஹல்ல பல்லேகலை ஆகிய சரணாலயங்களை தேசிய பூங்கா தரத்துக்கு உயர்த்துவதற்கும், காயன்கர்னி பிரதேசத்தினை கடல்சார் இயற்கை காப்பிடமாக பிரகடனப்படுத்துவதற்கும், கொட்டுஅத்தாவல சரணாலயமாகவும், அக்குரல, கொடிகஹவத்த ஆகியவற்றை புதிய வனசீவராசிகள் சரணாலயங்களாகவும், குடா ராவனா மகா ராவனா பிரதேசத்தை கடல்சார் சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்கும்,
மாதுகங்கை சரணாலயத்தின் எல்லைகளை மீளமைப்பதற்கும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment