தேசிய பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரரப்பட்டுள்ளன
நாட்டின் தேசிய பாடசாலைகளில் காணப்படும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழி மூலம் க.பொ.த.(உ/த) தரங்களில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்த்துக் கொள்வதற்காக அரசாங்க சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவைக் குழுவின் உத்தரவின்படி தகுதியானவர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் கோரரப்பட்டுள்ளன.
கல்வித்
தகைமை:
இலங்கை ஆசிரியர் சேவை
பிரமாணக்குறிப்புக்கமைய அன்று பல்கலைக்கழக
மானிய. ஆணைக்குழுவினால்
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில்
அல்லது பல்கலைக்கழக
மானிய. ஆணைக்குழுவினால்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தில் பட்டத்தைப்
பெற்றிருக்க் வேண்டியதுடன், விண்ணப்பிக்கும்
பாடமானது பட்டப்படிப்பில்
பிரதான பாடமாகக்
கற்றிருப்பது கட்டாயமானதாகும்.
வயதெல்லை:
13.02.2017 ஆம் திகதியன்று 18 வயதை விடக் குறையாது
மற்றும் 35 வயதை விட மெற்படாது இருத்தல்
வேண்டும்.
விண்ணப்பம்
அனுப்ப வேண்டிய
இறுதித் தினம்:
2017 பெப்ரவரி 13 ஆம் திகதி
நாட்டின்
தேசிய பாடசாலைகளில்
காணப்படும் க.பொ.த (உ.த) சிங்களம்,தமிழ் மற்றும்
ஆங்கிலமொழி
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1(அ)
தரத்திற்குப் பட்டதாரிகளை ஆட்சேர்த்துக்கொள்ளும் திறந்த
போட்டிப்பரீட்சை – 2017
சேவைக்கு
ஆட்சேர்க்கும் முறை :
பரீட்சை
ஆணையாளர் நாயகத்தினால்
போட்டிப் பரீட்சை
நடாத்தப்படும். எழுத்துப்பரீட்சைக்குஅனைத்து விண்ணப்பதாரிகளும்
தோற்றி ஒவ்வொரு
வினாத்தாளுக்கும் குறைந்த பட்சம் 40 புள்ளிகள்
பெற்றுக்கொள்ளப்படும் விண்ணப்பதாரிகளின் முழுப்புள்ளிகளின் கூட்டுத்தொகை முன்னுரிமைக்கமைய
நேர்முகப் பரீட்சை
மூலம் பாடசாலையை
அடிப்படையாகக் கொண்ட முறையின்கீழ், காணப்படும்
ஆசிரியர் வெற்றிடங்களுக்காக
ஆட்சேர்ப்பு நடைபெறும்.
இவ்
அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளை
கொண்டிராத விண்ணப்பதாரர்கள்
நேர்முகப்பரீட்சையின் போது நிராகரிக்கப்படுவர்.
2.2 இவ்வர்த்தமானி அறிவித்தலுக்குரியதாக
அதிக வெற்றிடங்கள்
காணப்படுவது நகரம் சார்ந்த பிரதேசங்களுக்கு
வெளியே கஷ்டப்
பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளிலாகும். நேர்முகப் பரீட்சையின்
போது விண்ணப்பதாரர்களுக்கு
உரிய வெற்றிடங்கள்
கொண்ட பாடசாலைப்
பட்டியல் காட்சிப்படுத்தப்படும். இதற்கமைய விண்ணப்பதாரர்களினால்
அச்சந்தர்ப்பத்தில் வெற்றிடம் கொண்ட பாடசாலைகளுக்காக
நியமனம் பெறுவதற்கான
விருப்பினை தொடரொழுங்கில் குறிப்பிட வேண்டும்.
குறிப்பு.-
பாடசாலையை அடிப்படையாக
கொண்ட முறையில்
நேர்முக பரீட்சையின்
போது ஒரே பாடசாலையை
கோரி விண்ணப்பித்த
சிலர் சமமான
புள்ளியை பெற்றிருந்தால்
விண்ணப்பதாரியின் நிரந்தர வதிவிடத்திலிருந்து அப்பாடசாலைக்குரிய தூரத்துக்கு
அமைவாக முன்னுரிமை கொடுக்கப்படும்.
2.3 இவ்வெற்றிடங்களுக்காக பாடசாலையை
அடிப்படையாகக் கொண்டு சேர்த்துக் கொள்ளப்படுவதினால்
ஐந்து வருடங்கள்
கடக்கும்வரை எக்காரணம் கொண்டும் இடமாற்றம்வழங்கப்படமாட்டாது.
மேலதிக
விபரங்களுக்கு:
2017.01.20 ஆம் திகதி
வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ள இலங்கை சனநாயக சோசலிசக்
குடியரசு வர்த்தமானப்
பத்திரிகையைப் பார்த்து அறிந்து கொள்ளமுடியும்.
வெற்றிடமுள்ள
பாடங்கள்:
0 comments:
Post a Comment