முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்கான
புதிய
கட்டடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்திற்காக புதியதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு
விழாவில் ஜனாதிபதி முஸ்லிம்
சமய பண்பாட்டு
அலுவல்கள் திணைக்களத்தின்
கட்டடதின் பெயர்படிகத்தை
திறை நீக்கம்
செய்து கட்டிடததை
திறந்து வைத்தார்.
அமைச்சர்களான எம்.எச்.ஏ.ஹலீம் ரவூப் ஹக்கீம், றிஷாட் பதியுதீன், ஏ.எச.எம்.பௌசி
உள்ளிட்ட பலர்
நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கொழும்பு
-10 ரி. பி.
ஜாயா மாவத்தை
180 ஆம் இலக்கத்தில்
அமைந்துள்ள இந்த புதிய கட்டடம் 600 மில்லியன்
ரூபா செலவில்
சகல வசதிகளையும்
கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது
என முஸ்லிம்
பண்பாட்டு அலுவல்கள்
திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.எச்.எம்.சமீல் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment