தேசிய முதியோர் சுகாதார கொள்கைக்கு

அமைச்சரவையின் அங்கீகாரம்


லங்கையில் சனத்தொகை வேகமாக வயதடைந்து வருகிறது. முக்கணிப்பு உத்தேசங்களுக்கமைவாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் பங்கு தற்போது காணப்படும் 12 வீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டில் 16 வீதத்திற்கும், 2050 ஆம் ஆண்டில் 29 வீதத்திற்கும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ந்நிலைமைக்கு முகங்கொடுக்கும் நோக்கில் சுகாதார துறையினை உரிய முறையில் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழியப்பட்டுள்ள தேசிய முதியோர் சுகாதார கொள்கைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top