சுற்றுலா ஹோட்டல்களினை வரையறை

பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கு

அமைச்சரவை அங்கீகாரம்


சுற்றுலா ஹோட்டல்களை 1 – 5 வரையான நட்சத்திர ஹோட்டல்களாக வகைப்படுத்தும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய குறைந்த பட்ச கொள்திறன் மற்றும் வசதிகள், அதற்கு உரித்தான அனுமதிப்பத்திர கட்டணங்களை குறித்துரைத்தல், கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு விதிகள், ஹோட்டல்களின் பரப்பளவு போன்ற விடயங்களை உள்ளடக்கி 2005ம் ஆண்டின் 38ம் இலக்க சுற்றுலாத்துறை சட்ட ஏற்பாடுகளின் கீழ் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதிய 196328 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறித்த அமைச்சரினால் வெளியிடப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைப்பதற்கு சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top