விமான ஓடுபாதை
புனரமைப்புப் பணிகள் காரணமாக
வெளிநாடு செல்லும் பயணிகளை
ஐந்து மணிநேரம் முன்னதாக
வருகை தர கோரிக்கை
கட்டுநாயக்க
சர்வதேச விமான
நிலையத்தின் விமான ஓடுபாதை புனரமைப்புப் பணிகள்
காரணமாக நாளை
முதல் கட்டுநாயக்க
விமான நிலையம்
தினமும் 8 மணித்தியாலங்கள்
மூடப்படவுள்ளது.
காலை
8 மணிதொடக்கம் மாலை 4 மணி வரையான 8 மணித்தியாலங்கள்
மூடப்பட்டிருக்கும் என போக்குவரத்து
மற்றும் சிவில்
விமான சேவைகள்
பிரதி அமைச்சர்
அசோக் அபேசிங்க
தெரிவித்துள்ளார்.
இதன்
காரணமாக வெளிநாடுகளுக்கு
செல்லும் பயணிகள்
5 மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான
நிலையத்திற்கு வருகை தருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.விமான ஓடுபாதை புனரமைப்பு பணிகளுக்கு
5 மில்லியன் டொலர் செலவு செய்யப்படவுள்ளதாக அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு
நெதர்லாந்து அரசின் கண்காணிப்பின் கீழ் சீன
நிறுவனம் ஒன்று
இதன் புனரமைப்பு
பணிகளை மேற்கொண்டு
வருவ தாக
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்
பிரதி அமைச்சர்
அசோக் அபேசிங்க
கூறியுள்ளார்.
புதிதாக
நிர்மாணிக்கப்படுகின்ற விமான ஓடுபாதை
3 ஆயிரத்து 335 நீளமும் 45 மீற்றர் அகலமும் கொண்டுள்ளமை
குறிப்பிடத்த க்கது.
0 comments:
Post a Comment