மத பிரசாரகர் ஜாகீர் நாயக் அறக்கட்டளையின்
ரூ.18 கோடி (இந்திய ரூபா) சொத்துகள் முடக்கம்
மத பிரசாரகர் ஜாகீர் நாயக் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.18 கோடியே 37 லட்சம் (இந்திய ரூபா) மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது.
வங்காளதேசத்தில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பயங்கரவாதி, இந்தியாவை சேர்ந்த மத பிரசாரகர் ஜாகீர் நாயக்கின் பிரசாரத்தால், தான் தூண்டப்பட்டதாக தெரிவித்திருந்தான்.
இதையடுத்து, ஜாகீர் நாயக்குக்கு எதிரான நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு முடுக்கி விட்டது. அவர் நடத்தி வரும் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை, மத்திய உள்துறை அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டது. ஜாகீர் நாயக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இச்சட்டத்தின் கீழ், அந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.18 கோடியே 37 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை இந்திய அமலாக்கப்பிரிவு நேற்று முடக்கியது.
இதே வழக்கு தொடர்பாக, எதிர் வரும் 30 ஆம் திகதி டெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமையகத்தில் ஆஜராகுமாறு ஜாகீர் நாயக்குக்கு தேசிய புலனாய்வு அமைப்பு 2-வது தடவையாக நேற்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
0 comments:
Post a Comment