தேசிய சேமிப்பு வங்கியின் 45வது ஆண்டு நிறைவு
தேசிய சேமிப்பு வங்கியின் 45வது ஆண்டு நிறைவு தினம் இன்றாகும்.
இதன் 45வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வங்கியின் கொள்ளுப்பிட்டி அலுவலத்தில் முழு இரவுநேர பிரித் பாராயணம் இடம்பெறும்.
இந்த வங்கி 90 ஆயிரம் கோடியை தாண்டிய சொத்துக்களை கொண்டதாகவும், 65 ஆயிரம் கோடியை தாண்டிய பண வைப்புக்களை கொண்டதாகவும் வலுவாக இயங்கி வருகிறது.
1972ம் ஆண்டு மார்ச் 16ம் திகதி அன்றைய நிதியமைச்சர் கலாநிதி என்.எம். பெரேராவின் தலைமையில் தேசிய சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய சேமிப்பு வங்கி தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பல விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment