அரச சேவையில் சேவை நீடிப்பின்றி
60 வயது வரை சேவையில் இருக்கலாம்
அரச சேவை ஆணைக்குழு தெளிவுபடுத்தல்
(அஸ்லம்)
அரச
சேவையில் கடமையாற்றும்
ஒருவர் சேவை
நீடிப்பின்றி அறுபது வயது வரை சேவை
நீடிப்பிற்கான கோரிக்கையோ, திணைக்கள் தலைவரின் அனுமதியின்றியோ
கடமையாற்ற முடியுமென
அரச சேவைகள்
ஆணைக்குழு மீளவும்
தெளிவுபடுத்தியுள்ளது.
இது
தொடர்பாக அரச
சேவைகள் ஆணைக்குழு
02/2012 ம்
இலக்கமிட்டு சுற்றறிக்கையொன்றை வெளியிட்ட
போதும் மாகாண
சபை நிருவாகங்கள்
அந்த சுற்றறிக்கையைக்
கவனத்திற் கொண்டு
செயற்படுவதில்லையென தொழிற்சங்கங்கள் அரச
சேவைகள் ஆணைக்குழுவிற்கு
முறையிட்டுள்ளன.
அரச
சேவைகள் ஆணைக்குழுவின்
தாபன நடவடிக்கைகள்
தொடர்பான 1589/30ம் இலக்க
அதிவிசேட வர்த்தமானி
அறிவித்தலின் 178ம் பிரிவில் 57 வயதுக்கு மேல்
சேவை நீடிப்பு
கேட்டுப்பெற வேண்டுமென கூறியுள்ளமையை
27.06.2012ம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கமைய 60 வயதுவரை சேவை நீடிப்பின்றி கடமையாற்றலாம்
என திருத்தம்
வெளியிடப்பட்டதாக அரச சேவை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும்,
அரச அலுவலர்
ஒருவர் தமது
சுயவிருப்பின் பேரில் 55 வயதுக்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட
காலப்பகுதியில் மூன்று மாத முன்னறிவித்தலுடன் ஓய்வுபெறலாம் எனவும் அரச சேவை
ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஒழுக்காற்று
காரணங்களுக்காக கட்டாய ஓய்வு மாத்திரம் வழங்கப்படலாம்.
அதற்காக உத்தியோகத்தரின்
முன்னைய சேவை
நிலைமை கவனத்திற்
கொள்ளப்பட்டு ஆறு மாத முன்னறிவித்தல் மேன்முறையீட்டுக்காக
வழங்கப்பட வேண்டும்
எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment