ஹஸனலியின் மனம் திறந்த கூட்டத்தை அடுத்து
கல்முனையில் ஒன்று கூடிய
முஸ்லிம் காங்கிரஸ் உயர் மட்ட குழு!
கல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான திட்டமிடல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று 4 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டமிடல் முன்னேற்றங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
கல்முனை - சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட இருக்கும் மருதமுனை,பாண்டிருப்பு,நற்பிட்டிமுனை,கல்முனை,சாய்ந்தமருது,சம்மாந்துறை போன்ற இடங்களை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் உயர் மட்ட குழு இன்று(2017/03/04) நேரில் சென்றும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ்,சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம்,பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ எம் மன்சூர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.நஸீர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை,முஸ்லிம் காங்கிரஸின் தலைமையின் சர்வதிகார போக்கிற்கு
எதிராக கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன் அலியினால் நேற்று 03.03.2017 நிந்தவூரில்
பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை எலோரும் அறிந்த விடயமாகும்.
,
0 comments:
Post a Comment