இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நிந்தவூரில்
"மக்கள் நீதி மன்றம்" முன் எம்.ரி ஹஸனலி
பல தியாகங்களுக்கு மத்தியில்
உருவாக்கப்பட்ட நமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இன்று நிலை தடுமாறி, இலக்கின்றி சென்று கொண்டிருக்கின்றது. இந்த பாதகமான போக்குகளை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதற்கான போராட்டத்தை இன்று நிந்தவூரில் இருந்து தொடக்கி வைக்கின்றேன்.
இப்போது எனக்கு வயது 72 ஆகும். எனக்கு தலைவர் பதவி வேண்டாம், பாராளுமன்ற உறுப்பினர் பதவி வேண்டாம், அமைச்சர் பதவி வேண்டாம். கட்சியின் இந்த மீட்புப் போராட்டத்திற்கு ஓர் ஆலோசகராக செயற்படவே முன் வந்துள்ளேன்.
இந்தப் போராட்டத்தில் யார் இணைந்தாலும், இணைந்து கொள்ளா விட்டாலும் மக்களின் ஆதரவுடன் தனித்துப் போராடவே எண்ணினேன். ஆனால் இப்போது என்னோடு கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் பலர் இணைந்துள்ளார்கள்.
என்னோடு இணைந்துள்ள உயர்பீட உறுப்பினர்களில் பலரை உயர்பீடத்திலிருந்து நீக்கியுள்ளதாக அறிகின்றேன்.
அவர்கள் பல தியாகங்களுக்கு மத்தியில்தான் இந்தப் போராட்டத்தில் என்னோடு கைகோர்த்துள்ளார்கள். மர்ஹூம் அஸ்ரப்பின் காலத்தில் பின்பற்றப்பட்ட யாப்பு, கொள்கை, கோட்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும்.
- முஸ்லிம் காங்கிரஸின்
முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி ஹஸனலி அவர்கள்
0 comments:
Post a Comment