நான் பிரம்பு எடுக்கப்போனால்
கட்சியில்
ஒருவரும் இருக்கமாட்டார்கள்
இப்போது அவர்கள்
எனக்கே பிரம்பு எடுத்திருக்கிறார்கள்
நிந்தவூரில் ரவூப் ஹக்கீம்
நான்
பிரம்பு எடுக்கப்போனால் கட்சியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். இப்போது அவர்கள் எனக்கே
பிரம்பு எடுத்திருக்கிறார்கள். என்று ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.
நிந்தவூர்
அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிந்தவூர் கிளையின்
கூட்டமும், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள்
உறுப்பினர் ஜப்பார் அலி தலைமையில் கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை நிந்தவூர்
பிரதேச சபையின்
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில்
பிரதம அதிதியாக
கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு
தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் முஸ்லிம்
காங்கிரஸ் தேசியத் தலைவர் ஹக்கீம் தொடர்ந்து பேசும்போது மேலும் கூறியதாவது;
ஹஸன் அலி வேதனையுடன் இருக்கிறார். அவர் கூட்டம்
நடத்துவதை நாங்கள் ஆமோதிக்கிறோம். இந்த விவகாரம் மிகப்பெரிய அசிங்கமாக மாற்றுத்தரப்பிலிருந்து உந்துசக்தியுடன்
பார்க்கப்படுகிறது. கூட்டத்துக்கு முன்னால்
நின்றுகொண்டு கூப்பாடு போட்டவர்கள் முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் அல்ல. அவர்களுடைய
உள்ளூர் தலைமைகளை ஆட்சிக் கதிரையில் அமர்த்தவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள். இவர்கள்
சிறியதொரு வட்டத்தை போட்டுக்கொண்டு அதுதான் கட்சி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால்,
ஒரு தனிமனிதனின்
வேதனையை பகடைக்காயாக
வைத்து ஊர்
ஊராக பிரசாரம்
செய்யப்போவதாக சிலர் சித்து விளையாட்டு காட்டுவதை
அனுமதிக்க முடியாது
நேற்று( 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை) நிந்தவூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு
பதில்கூறும் கூட்டமாக இக்கூட்டத்தை நடத்தப்படவில்லை.
கண்டியில் நடைபெற்ற
மக்கள் பிரதிநிதிகள்
செயலமர்வில், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு மாதத்துக்கு 4 சிறிய கூட்டங்களை நடத்துமாறு
கூறியிருந்தேன். அதில் முதலாவது கூட்டமாக எனது
கூட்டத்துக்கு வரவேண்மென நிந்தவூர் பிரதேச சபையின்
முன்னாள் உறுப்பினர்
ஜப்பார் அலி
என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அதன் பிரகாரம்தான் இக்கூட்டம்
நடைபெறுகிறது.
முஸ்லிம் காங்கிரஸை வழிநடத்துவதாக இருந்தால்
குருடனாகவும், செவிடனாகவும் இருந்தாக வேண்டும் என்று
மறைந்த தலைவர்
கூறுவார்.. நான் செவிடனாகவே இருந்துவிட்டு போனால்
என்ன என்றும்
யோசித்திருக்கிறேன்.
நேற்று நிந்தவூரில் நடந்த விடயம் பற்றி
8 மாதங்களுக்கு முன்னரே எனக்குத் தெரியும். அதற்கான
முஸ்தீபுகள் நடைபெற்றது எனக்கு விளங்காத
ஒரு விடயமல்ல.
கடந்த மாகாணசபைத் தேர்தலில்
திடீரென சேர்மன் சங்கம் என்றொரு
குழுமம் உருவாகியது.
இந்த சங்கம்
உருவானதன் பின்னால்
ஒரு வரலாறு
இருக்கிறது. இந்த சங்கம் படுத்திய பாடு
பொல்லாத பாடு.
சில வாக்குறுதிகளை
தந்து, அவற்றை
நிறைவேற்றக்கூடாது என்று சொன்னவர்கள்தான்,
இப்போது அதில்
படமெடுத்து ஆடுகிறார்கள்.
கல்முனை
மாநகரசபை முதல்வர்
பதவி பங்கீடு,
இறக்காமம் பிரதேச
தவிசாளர் பதவி
பங்கீடு என்பன
தலைவருக்கு முன்னால் செய்யப்பட்ட உடன்பாடுகள். அதில் இருதரப்பும் இணக்கம்
கண்டிருந்தார்கள். ஆனால், கட்சிக்கு
மக்களுக்கு கொடுத்த இந்த வாக்குறுதிகளை தடுப்பதற்கு
சேர்மன் சங்கத்தவர்கள்
ஆளாய் பறந்தனர்.
அதன் பின்னால்
சில தேவைப்பாடுகள்
இருந்தன. அதற்காக
அவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
இதையெல்லாம்
அலட்டிக்கொள்வது ஒரு பலமான தலைமைக்கு பலவீனமானது.
இதன் பின்னாலிருக்கும்
சூட்சுமங்களும், தந்திரங்களும் தெரியாமல் நாங்கள் கட்சியை
நடத்தவில்லை. மறைந்த தலைவருக்கும் ஏராளமாக பழிசுமத்தினார்கள்.
அப்படி பழிசுமத்தியவர்களும்
கட்சிக்குள்
இருந்தார்கள்.
நான் உட்பட, முகவரி
இல்லாதவர்களை எல்லாம் தலைவர்களாக ஆக்கியது இந்த
இயக்கம். சாதாரண
மக்களிலிருந்து பல தலைவர்களை உருவாக்கிய தனிப்பெரும்
இயக்கம். திடீரென
கட்சியை தூய்மைப்படுத்தப் போகிறோம் என்று
அபாண்டங்களை, அவதூறுகளையும் சொல்லிக்கொண்டு
ஒரு கூட்டம்
கிளம்பியிருக்கிறது. இது வண்டியின்
பின்னால் சென்றார்
பிராணியின் கதைக்கு ஒப்பானது.
ஹஸன்
அலி வேதனையுடன்
இருக்கிறார். அவர் கூட்டம் நடத்துவதை நாங்கள்
ஆமோதிக்கிறோம். நானும் ஏற்றுக்கொள்கிறேன்.
ஹஸன் அலி
அவருடைய பிரச்சினையை
என்னுடனும் கதைத்திருக்கிறார். கட்சியிடமும்
கதைத்திருக்கிறார். ஆனால், அவரை
பகடைக்காயாக வைத்து, ஊர் ஊராக பிரசாரம்
செய்யப்போவதாக சிலர் சித்து விளையாட்டு காட்டுவதை
அனுமதிக்க முடியாது.
கட்டாய உச்சபீடக் கூட்டத்தில்
என்னை தலைவராக
பிரேரித்தவர் ஹஸன் அலி. அவருடைய கூட்டத்தில்
வைத்தும் அதை
மீண்டும் ஆமோதித்துவிட்டு
சென்றிருக்கிறார். அப்படியான ஒருவரை
நான் இழிவுபடுத்த
முடியாது. அது
மனிதப் பண்பு
அல்ல.
ஒரு
தனிமனிதனுடைய வேதனையை இன்று கொஞ்சப்பேர் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஒருகாலத்தில்
எதிர்த்தபோது பாதுகாத்தவன் நான். இன்னும் பாதுகாப்பவன்
நான். எதிர்காலத்திலும்
பாதுகாப்பவன் நானாகத்தான் இருப்பேன். கட்சிக்கு பாதிப்பு
ஏற்படுத்தாத வரை, கட்சியிலுள்ளவர்களுக்கு
அநியாயம் நடந்தால்
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது நான்.
தலைமைத்துவத்தை
இலக்குவைத்து செய்யப்படும் இந்த வேலைகளில், முரண்பாடுகள்
இருந்தால் நேரில்
பேசுங்கள். முரண்பாடுகளாக சொல்லப்படுபவை
எல்லாம் பொதுவான
விடயங்களாக இருந்தன. ஒரு சில தனிநபர்களின்
விவகாரங்களை நான் கண்டுகொள்வதில்லை என்றும் சொன்னார்கள்.
இவையெல்லாம் இந்த சேர்மன் சங்கத்தினால் ஏற்பட்ட
பிரச்சினை.
இந்த
பின்னணியில் இயக்கத்துக்கு பாரியதொரு பாதிப்பை ஏற்படுத்த
முடியும் என்ற
அசட்டு தைரியத்துடன்
இவர்கள் செயற்பட்டு
வருகிறார்கள். கூட்டம் போடுபவர்கள் தைரியமாக கூட்டம்
போடுங்கள். இதை நான் சாதுவாகத்தான் சொல்கிறேனே
தவிர, சவாலாக
சொல்லவில்லை.
அப்போதுதான் அதன் பாரதூரம் என்னவென்பதை அவர்கள்
புரிந்துகொள்வார்கள்.
கட்சித்
தலைமை வன்முறையை
பிரயோகிக்கமாட்டாது. நான் வன்முறைகளை
எதிர்கொண்டிருக்கிறேன். சவால்களுக்கு
மத்தியிலும் பலரும் கோட்டையாக நினைத்திருந்த இடங்களுக்கும் நான்
சாதாரணமாக சென்றிருக்கிறேன்.
நிந்தவூர் கூட்டத்துக்கு
செல்லவேண்டாமென என்னிடம் கெஞ்சினார்கள். ஆனால், நான்
வருவதாக வாக்குறுதியளித்த
கூட்டத்துக்கு மாறுசெய்யாமல் இன்று இங்கு
வந்திருக்கிறேன்.
மற்றவர்கள்
சவால்களை ஏற்படுத்துகிறார்கள்
என்பதற்காக அதற்காக ஓடி ஒளியும் ஒருவராக
கட்சித் தலைமை
ஒருபோதும் இருக்க மாட்டாது. சவால்களை எதிர்கொள்ளும்
திராணி தலைமைக்கு
அவசியம். மக்களுக்கு
மத்தியில் வெளிப்படையாக
பேசுவதுதான் எங்களுக்கு மத்தியிலுள்ள கடமை.
கரையோர
மாவட்டத்தை மறந்துவிட்டோம் என்று மிகப்பெரியதொரு அபாண்டத்தை
சொல்லவருகிறார்கள். முள்ளை முள்ளால்தான்
எடுக்கவேண்டும். நேர்மையான அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம்
காங்கிரஸ் நெருக்கமானதொரு
சிநேகத்தை பேணிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதனை
லாவகமாக பெற்றெடுப்பதற்காக
வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம்.
அறிக்கை
மன்னர்களாக இருந்துகொண்டு நாங்கள் எதையும் சாதிக்கவில்லை.
நிந்தவூரிலுள்ள கிரான் கோமாரி காணிப்பிரச்சினைக்கு அறிக்கை விட்டு ஒரு ஏக்கர்
காணியை யாராவது
மீட்கமுடியுமா. ஆனால், எவ்வித அறிக்கைகளையும்
விடமால் கிரான் கோமாரி பிரச்சின்கைகு
இந்த தலைமை
நிச்சயமாக முடிவினை
பெற்றுத்தரும்.
ஒரு
தேசியப்பட்டியல் ஆசனம் என்பது ஒருத்தரையும் கடைசிவரை
கட்சியில் இருக்கவிடாது.
முஸ்லிம் காங்கிரஸ்
மூலம் தேசியப்பட்டியல்
வழங்கி 13 பேரை
நாங்கள் அலங்கரித்தோம்.
ஆனால், இப்போதும்
அஸ்லமை தவிர,
மற்ற எல்லோரும்
தேசியப்பட்டியலை அனுபவித்துட்டு கிட்டத்தட்ட
போய்விட்டார்கள். தேசியப்பட்டியல் வழங்கி
இரண்டு, மூன்று
மாதங்கள் செல்வதற்கு
இடையில் அது
பிரச்சினையில்தான் போய் முடிகிறது.
நான்
கஃபத்துல்லாவுக்கு சென்று அல்லாஹ்விடம்
துஆ கேட்டால்,
ஒன்றை மட்டும்தான்
கேட்பேன். இந்த
தேசியப்பட்டியலை மட்டும் இல்லாமல் செய்துவிடு என்றுதான்
கேட்பேன். அப்போதுதான்
இந்தக் கட்சியை
காப்பாற்றமுடியும்.
ஆனால்,
சகோதரர் ஹஸன்
அலிக்கு தேசியப்பட்டியல்
வழங்கி அலங்கரிப்பதற்கு எனக்கு எந்தவொரு பிரச்சினையும்
கிடையாது. ஆனால்,
இந்த விவகாரத்தில்
தலைவர் ஏன்
தயக்கம் காட்டினார் என்பதில் அவர்
தெளிவுபெற வேண்டும்.
தலைவர் கொடுத்த
வாக்குறுதியின் பெறுமானம், என்னை சொல்லவைத்தாலும் அதை செய்வேன்.
பாலமுனையில்
நடைபெற்ற கூட்டத்தில்
அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதை
உறுதிப்படுத்துமாறு கூறுகிறார். அட்டாளைச்சேனைக்கு
நான் கொடுப்பதாக
கூறிய தேசியப்பட்டியல்
கட்டாயம் கிடைக்கும்.
ஆனால், அவர்தான்
கூறுகிறார் ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் கொடுக்ககூடாது
என்று. இப்போதுதான்
விளங்குகிறது அதன் தாற்பரியம்.
கறுப்பு
ஆடுகளை நான்
கண்டுகொள்ளவில்லை என்று யாரும்
நினைக்கவேண்டாம். அந்த கறுப்பு ஆடுகள் எங்கு
மேய்கிறது என்று
எனக்குத் தெரியும்.
இப்படியான கூட்டத்தினரை
நான் நெடுங்கயிற்றில்
விட்டிருக்கிறேன். ஆனாலும், நான்
நிதானத்துடன் இருக்கிறேன்.
உங்களுடைய
பிரச்சினைகளை தாராளமாக வந்து கதைக்கலாம்.
அவற்றுக்கான தீர்வுகளை நாங்கள் கூட்டாக எடுப்போம்.
ஏராளமான பிரச்சினைகளுக்கு
தீர்வு காண்பதற்கான
ஒரு சிறந்த
கட்டத்திலே, நாங்கள் எங்களை சீரழிக்கின்ற வேலையை
செய்யமால், இயக்கத்தை பாதுகாக்கும் நோக்கில் செயற்படவேண்டும்.
அணிகள்
உருவாகுவது என்பது கட்சிக்கு ஆரோக்கியமானதல்ல. ஆனால், அவற்றையும் மீறி பலர்
அணிகளை அமைத்திருக்கிறார்கள்.
அவர்கள் எந்த
அணியைச் சேர்ந்தவர்கள்
என்பது எல்லோருக்கும்
தெரியும். கட்சிப்
போராளிகளுக்கு நன்றாகத் தெரியும். அதனை தலைமை
சொல்லவேண்டிய தேவையும் இல்லை. ஆனால், முகஸ்துதிக்காக
வெளியில் அதனை
சொல்லாமல் இருக்கிறோம்.
எல்லோருக்கும்
எல்லாம் எப்போதும்
கிடைக்காது. ஆனால், சிலருக்கு எப்போதாவது ஏதாவது
கிடைக்கும். அதைத் தடுப்பது அரசியல் தார்மீகமல்ல.
கட்சியிலிருந்த பலர் உள்ளூராட்சி சபையிலிருந்து பாராளுமன்றம்
வரை படிப்படியாக
முன்னேறியிருக்கிறார்கள். அது அவர்களுடைய
வளர்ச்சியைக் காட்டுகிறது.
அதேவேளை,
இன்னும் தகுதியுள்ளவர்கள்,
பெறுமானமுள்ளவர்கள், கட்சிக்காக
பாடுபட்டவர்கள் என எத்தனையோர் பேர் விரக்தியோடு
ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது,
எப்போதாவது கிடைத்தால் நாங்கள் அதை மனப்பூர்வமாக
அங்கீகரிக்கும் விசாலமான மனசு எங்களுக்கு வரவேண்டும்.
பலர் பொறுமையிழந்து என்னுடன்
சண்டை பிடிப்பார்கள்.
நான் இயன்றவரை
அவர்களை சமாதானப்படுத்துவதுண்டு.
சிலவேளைகளில், கொஞ்சம் கடிந்துகொள்வதும் உண்டு.
ஆனால், மறுநாள்
நான் மன்னிப்புக்கேட்ட
சில சம்பவங்களும்
உள்ளது.
இவ்வாறு நான்
கட்சியுள்ளவர்களை அரவணைத்துக்கொண்டே செல்கிறேன்.
ஏதோ கொஞ்சம் நோவிருத்திருக்கிறார்கள்.
ஆனால், இவ்விடயங்களை
கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. செவிடனாகவும்
குருடனாகவும்
சிலவேளை இருந்தாக
வேண்டிய தலைமை,
நிரந்தரமாக அப்படியே இருக்கமாட்டாது என்பதை தெளிவாக
சொல்லிக்கொள்கிறேன். இது தலைவர்களால்
பாதுகாக்கப்பட்ட இயக்கமல்ல, மாறாக மக்களாலும் போராளிகளாலும்
பாதுகாப்பட்ட இயக்கம். அது தொடர்ந்தும் பாதுகாக்கப்படும்
இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment