இலங்கை தொழிலாளியின் நேர்மை
பாராட்டிய சவூதி இளவரசர்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணியாளர் ஒருவர் அந்நாட்டு அதிகாரிகளின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
காணாமல் போன தங்க ஆபரண பொதி ஒன்று இந்த பணியாளருக்கு கிடைத்துள்ளது. அவர் அதனை தனது எஜமானிடம் கொடுத்தன் காரணமாகவே அவருக்கு இந்த பாராட்டு கிடைத்துள்ளது.
சவூதி அரேபிய சுற்றுலா மற்றும் தேசிய உரிமைகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் இலங்கை பிரஜையின் நேர்மையை பாராட்டியுள்ளார்.
அத்துடன் சவூதி அரசு வழங்கும் பெறுமதியான சான்றிதழையும் வழங்கியுள்ளார். வீட்டை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளிக்கு ஒரு பொதி கிடைத்துள்ளது.
அதனை திறந்து பார்த்த போது அதில் பெறுமதியான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து அதனை உடனடியாக தனது எஜமானிடம் கொடுத்துள்ளார்.
தொழிலாளியின் நேர்மை பாராட்டுக்குரியது எனவும் அது அவரது தாய் நாட்டுக்கு பெருமை எனவும் வெளிநாட்டில் இருந்து தொழிலுக்காக வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இது சிறந்த முன்னுதாரணம் கிடைத்துள்ளதாகவும் இளவரசர் சல்மான் பின் சுல்தான் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கை தொழிலாளின் பெயரோ அவரது இலங்கை முகவரியையோ சவூதி ஊடகங்கள் வெளியிடவில்லை.
0 comments:
Post a Comment