ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில்

இன்று மஹிந்த ராஜபக்ஸவிடம் விசாரணை

முன்னிலையாக மாட்டார் என அறிவிப்பு!


பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இன்று முன்னிலையாக உள்ளார்.
                                                                                                                                                                                       
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்து இன்று மஹிந்த ராஜபக்விடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஜனாதிபதியாக கடயைமாற்றிய காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையினால் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் மஹிந்தவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்தவிடம் இன்றைய தினம் விசாரணை செய்யப்பட உள்ளது.

இன்று முற்பகல் 10.00 மணியளவில் மஹிந்த ராஜபக், ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுவார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை மஹிந்த ராஜபக் நிராகரித்து வருவதுடன் இது அரசியல் பழிவாங்கல் என குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று மஹிந்த முன்னிலையாவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மஹிந்த இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாக மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட காரணங்களினால் இவ்வாறு முன்னிலையாக மாட்டார் என அவரது சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாக வேறு தினமொன்றை தருமாறு ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top