முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்

ரவூப் ஹக்கீம் அவர்களின் நிந்தவூர் பேச்சும்

மக்கள் கருத்தும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிந்தவூரில் தெரிவிப்பு,
நான் பிரம்பு எடுக்கப்போனால் கட்சியில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். இப்போது அவர்கள் எனக்கே பிரம்பு எடுத்திருக்கிறார்கள்.

                 -------------------------------------------------------------------------------------------------
மக்கள் கருத்து:- அப்படியானால்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் தண்டிக்கப்ப வேண்டியவர்கள் சமூக நலனில் அக்கறையில்லாதவர்கள் என்றா சாட்சியம் சொல்கிறீர்கள்?
      --------------------------------------------------------------

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிந்தவூரில் தெரிவிப்பு,.

கரையோர மாவட்டத்தை மறந்துவிட்டோம் என்று மிகப்பெரியதொரு அபாண்டத்தை சொல்லிவருகிறார்கள். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். நேர்மையான அரசியல் செய்துகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் நெருக்கமானதொரு சிநேகத்தை பேணிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அதனை லாவகமாக பெற்றெடுப்பதற்காக வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம்.
           ---------------------------------------------------------------------------------------------------
மக்கள் கருத்து:- கரையோர மாவட்டத்தை லாவகமாக பெற்றுக்கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் வகுக்கப்படும் வியூகங்கள் என்ன? அதனை கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களும் தமிழர்களும் அறிந்து கொள் விரும்புகின்றார்கள். ஒரு சமூகத்தை ஏமாற்றி இன்னொரு சமூகம் ஒன்றாக வாழ முடியாது. அந்த வியூகங்களை தமிழர்களும் அறிந்து கொள்ள வேண்டும் முஸ்லிம்களும் அறிந்து கொள்ளவேண்டும். லாவகமாக முஸ்லிம்கள் எதனையும் பெற விரும்பவில்லை. அவர்களின் உரிமையயே பெற விரும்புகின்றார்கள். அதற்காகவே முஸ்லிம் காங்கிரஸையும் உருவாக்கினார்கள். எனவே, அந்த வியூகத்தை  மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
               --------------------------------------------------------------------------------------

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிந்தவூரில் தெரிவிப்பு,.

நான் கஃபத்துல்லாவுக்கு சென்று அல்லாஹ்விடம் துஆ கேட்டால், ஒன்றை மட்டும்தான் கேட்பேன். இந்த தேசியப்பட்டியலை மட்டும் இல்லாமல் செய்துவிடு என்றுதான் கேட்பேன். அப்போதுதான் இந்தக் கட்சியை காப்பாற்றமுடியும்.
         
               --------------------------------------------
மக்கள் கருத்து:- தேசியப்பட்டியல் பதவிகள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படுவதும் சகல பிரதேசங்களிலும் தேசிப்பட்டியல் மூலம் பிரதிநிதித்துவம் தரப்படும் என தலைமை வாக்குறுதிகளை அள்ளி வீசுவதுதான் தேசியப்பட்டியல் பிரச்சினைக்கு மூல காரணம்.
ஏனைய சிங்கள, தமிழ் கட்சிகளிடையே தேசியப்பட்டியல் பிரச்சினை வெளிப்படையாக இல்லையே. தானே தலையில் மண்ணை அள்ளிப்போட்டு புலம்புகின்ற கதையே  தேசியப்பட்டியல் விவகாரம்.
                          ----------------------------------------------------------------------------------------

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிந்தவூரில் தெரிவிப்பு,.

கறுப்பு ஆடுகளை நான் கண்டுகொள்ளவில்லை என்று யாரும் நினைக்கவேண்டாம். அந்த கறுப்பு ஆடுகள் எங்கு மேய்கிறது என்று எனக்குத் தெரியும். இப்படியான கூட்டத்தினரை நான் நெடுங்கயிற்றில் விட்டிருக்கிறேன். ஆனாலும், நான் நிதானத்துடன் இருக்கிறேன்.

              --------------------------------------------
மக்கள் கருத்து:- இப்படி நீங்கள் கண்டு கொண்டுள்ள கறுப்பு ஆடுகள்தான் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் அந்தஸ்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. சமூகத்திற்காக கட்சி என்றால் அந்த கறுப்பு ஆடுகளை நெடுங்கயிற்றில் மேய்ந்து சமூகத்தை பாழடிக்க விடாமல் தக்க நடவடிக்கை எடுப்பதுதான்  உண்மையான நேர்மையுள்ள தலைமைத்துவத்தின் கடமை.
                          -------------------------------------------------------------------------------

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நிந்தவூரில் தெரிவிப்பு,.

இன்னும் தகுதியுள்ளவர்கள், பெறுமானமுள்ளவர்கள், கட்சிக்காக பாடுபட்டவர்கள் என எத்தனையோர் பேர் விரக்தியோடு ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏதாவது, எப்போதாவது கிடைத்தால் நாங்கள் அதை மனப்பூர்வமாக அங்கீகரிக்கும் விசாலமான மனசு எங்களுக்கு வரவேண்டும்.

               ---------------------------------------------
மக்கள் கருத்து:- ஆமாம் கட்சிக்காக பாடுபட்டவர்கள் என எத்தனையோர் பேர் அம்பாறை மாவட்டத்தில் விரக்தியோடு ஒதுங்கியிருக்கிறார்கள். அவர்களைக் கண்டு பிடியுங்கள். அவர்களுக்கும் இடம் கொடுங்கள். கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்..கபூர் போன்றவர்களை கட்சியினர் இன்னும் கண்டுகொள்ளவில்லை. அவருக்கும் இடம் கொடுங்கள். நன்றி செலுத்துங்கள்.
             -----------------------------------------------


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top