வங்கி கணக்கு தொடங்கிய 116 வயது மூதாட்டி
மெக்சிகோவில்
116 வயது மூதாட்டி ஒருவர் வங்கிக் கணக்கு தொடங்கி அரசு உதவிகளை பெற்று வருகிறார்.
மெக்சிகோவில்
உள்ள குயாடாலஜாராவை
சேர்ந்தவர் மரியா பெலிஸ் நவா. இவருக்கு
116 வயது ஆகிறது.
இவருக்கு அரசு
நலத்திட்டங்கள் வழங்கி வருகிறது. எனவே அங்குள்ள
ஒரு வங்கியில்
கணக்கு தொடங்க
விரும்பினார்.
ஆனால்
வங்கி சட்ட
திட்டப்படி 110 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டுமே
கணக்கு தொடங்க
முடியும் என
கூறி மறுத்துவிட்டது.
இதனால் அவரால்
அரசின் நலத்திட்ட
உதவிகள் பெற
முடியவில்லை.
இதுகுறித்து
பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அதை தொடர்ந்து
வங்கி நிர்வாகம்
தானாக முன்வந்து
மரியாவுக்கு வங்கி கணக்கு தொடங்கி உதவியது.
தற்போது அவருக்கு
அரசின் உதவிகள்
கிடைத்து வருகிறது.
0 comments:
Post a Comment