மாத்தறை 'ஆற்றங்கரையோரப் பூங்காவின்'
அபிவிருத்திக்கு
அமைச்சரவை அங்கீகாரம்
மாத்தறை 'ஆற்றங்கரையோரப் பூங்காவின்' அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் வாசிகசாலை ஒன்றை அமைத்தல், விளையாட்டரங்கு ஒன்றை நிர்மாணித்தல், நீரினை அண்மித்த வீட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், அலுவலகம் மற்றும் நிர்வாக அபிவிருத்தி நடவடிக்கைகள், தேசிய உற்சவங்களுக்காக மத்திய நிலையம் ஒன்றை நிர்மாணித்தல், படகு போக்குவரத்து வசதிகளுடன் கூடிய ஆற்றினை மையமாகக் கொண்ட விளையாட்டுக்களை மேம்படுத்தல் மற்றும் வாகன தரிப்பிடங்களை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்படுவதுடன்,
அதன் முதற்கட்டமாக ஆற்றுக்கரை மண்சரிவை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக தற்போது உரித்தாக்கப்பட்டுள்ள இடங்களின் உரிமையினை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கைமாற்றிக் கொள்வதற்கும்,
வேலைத்திட்டத்தின் இறுதியில் அதன் செயற்பாடுகள் மற்றும் பேணுகைக்காக மாத்தறை மாநகர சபைக்கு கையகப்படுத்துவதற்குமாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment