நிலையான சமாதானத்திற்காக
இலங்கை முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங்,
சோனியா காந்திஆகியோரையும் பிரதமர் சந்தித்தார்
இணக்கப்பாட்டு
அரசாங்கம் முன்னெடுக்கும்
வேலைத்திட்டங்களுக்கு ஆகக்கூடிய பங்களிப்பை
வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில்
உள்ள ஹைதராபாத்
மாளிகையில் இந்தியப் பிரதமருக்கும், பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு
பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது.
இந்தியப்
பிரதமர் இந்துசமுத்திர
பொருளாதார, வர்த்தக, சமூக மற்றும் நிதி
கேந்திர நிலையமாக
வளர்ச்சியடைவதற்காக இலங்கைக்கு ஆகக்கூடிய
ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இந்தியப் பிரதமர் இதன்
போது கூறினார்.
இந்திய
இலங்கை நட்புறவை
உயர்மட்டத்திலும் நெருக்கமான முறையிலும் முன்னெடுப்பதன் முக்கியமாகும்.
இதற்காக இந்தியப்
பிரதமர் வழங்கும்
ஒத்துழைப்பிற்கு விசேட பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
ரைசினா
என்ற கலந்துரையாடலுக்கு
அமைய இலங்கைக்கு
உன்னதமான ஒத்துழைப்பை
வழங்குவதற்கு ஜப்பானும், இந்தியாவும் அர்ப்பணித்துள்ளன. இது தொடர்பில் இரு நாட்டுப்
பிரதமர்களும் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
முகாமைத்துவம்,
தகவல் தொழில்நுட்பம்
பொறியியல், ஆகிய விடயங்கள் தொடர்பில் உயர்
கல்வி நிறுவனம்
மற்றும் பல்கலைக்கழகமொன்றை
இலங்கையில் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும்
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.
பிராந்தியத்தில்
அமைதி மற்றும்
பாதுகாப்பு இரண்டு நாடுகளுக்கும் முக்கியமான விடயமாகும்.
இந்துசமுத்திர ஒழுங்கு விதிகள், தர்மம் மற்றும்
சுதந்திர கப்பல்
பயணத்தை உறுதி
செய்வது தொடர்பிலும்
இரு நாட்டுத்தலைவர்களும்
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்திய
நிதியுதவியின் கீழ் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும்
திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பிலும் இதன்
போது கவனம்
செலுத்தப்பட்டது. பிரதமர் மோதியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்திய பொருளாதாரம் வலுவடைந்து
வருவதாக பிரதமர்
ரணில் விக்ரமசிங்க
இதன் போது
தெரிவித்தார்.
இரண்டு
நாட்டு மக்களுக்கு
இடையில் அந்யோன்ய
புரிந்துணர்வு மேம்படுத்தப்படுவதன் அவசியம்
இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதற்கான இதற்கான
புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
இந்தியாவின்
சார்பில் அந்நாட்டின்
வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜும், இலங்கையின்
சார்பில் அமைச்சர்
மலிக் சமரவிக்ரமவும்
இதில் கைச்சாத்திட்டனர்.
இயற்கை
எரிவாயுவைத் தயாரித்தல், சூரிய சக்தி மூலமான
மின் உற்பத்தி
நிலையங்களை அமைத்தல், திருகோணமலை நகரம் மற்றும்
பொருளாதார வலயத்தை
அபிவிருத்தி செய்தல், வீதி அபிவிருத்தி ரயில்
சேவையை நவீனமயப்படுத்தல்,
கொள்கலன் பிரிவு,
விவசாயம் மற்றும்
கால்நடை உற்பத்தி
நீர்முகாமைத்துவம் ஆகிய னபல
துறைகளுக்காக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது
தொடர்பில் இரு
நாடுகளும் கவனம்
செலுத்தியுள்ளன. இது தொடர்பில் இரு தலைவர்களும்
பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
இதேவேளை,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியுடனான சந்திப்பும் இடம்பெற்றது.
தனது கட்சியானது இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையேயான வரலாற்று உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் பிராந்திய ஜனநாயகத்தை ஆதரிக்க உதவுவதாகசோனியா காந்தி இச்சந்திப்ப்பின்போது தெரிவித்தார்.
இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி மன்மோகன் சிங் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். அங்கு ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் மற்றும் பிராந்தியத்தின் அரசியல் மற்றும் சமூக போக்குகள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
0 comments:
Post a Comment