மீத்தொட்டமுல்ல பிரதேசத்தில் குப்பை மேடு சரிந்த
அனர்த்தம் தொடர்பில் பாதிப்புக்கு உள்ளான
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் குறித்த அமைச்சர்கள் அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16,19 மற்றும் 21ம் திகதிகளில் இடம்பெற்ற கூட்டங்களின் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக வீடுகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை அரசாங்கத்தினால் மேற்கொள்வதற்கும்,
அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்காக 03 மாதங்களுக்கு உள்ளடங்கும் வகையில் மாதாந்தம் 50,000 ரூபா வீதம் வீட்டு வாடகை கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கும்,
நிரந்தர வீடுகளில் குடியேறுவதற்கு செல்லும் குடும்பங்களுக்காக போக்குவரத்து செலவுகளை பெற்றுக் கொள்வதற்கும்,
தற்போது நலன்புரி நிலையங்களில் வசிக்கும் குடும்பங்களுக்காக, அவர்கள் நிரந்தர வீடுகளில் குடிபோகும் வரை உலர் உணவுகள் மற்றும் இதர சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்கும்,
பாதிப்புக்கு உள்ளான வீடுகளுக்கு தேவையான வீட்டு உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி 250,000 ரூபா நிதியுதவியினை செய்வதற்கும்,
பாதிப்புக்கு உள்ளான பாடசாலை சிறுவர்களுக்கு தேவையான சீருடைகள், பாடசாலை உபகரணங்கள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் என்பவற்றை பெற்றுக் கொடுப்பதற்கும்,
குறித்த பகுதியை அனர்த்த எச்சரிக்கை வலயமாக வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment