ஞானசார தேரர் தொடர்பில் முஸ்லிம் எம் பிக்கள்

அரசாங்கத்திடம் கேள்வி எழுப்ப வேண்டும்



ஞானசார தேரருக்கு மாவாட்ட செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி கட்டளையிடும் அளவுக்கு அதிகாரத்தை வழங்கியது யார் என நல்லாட்சியில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.
இது தொடர்பில்  அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
 ஞானசார தேரருக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் டபுள் ப்ரோமோஷன் வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி பங்காளிகளில் ஒருவரான  ஞானசார தேரர் அவரது வேலையை அரச உயர் மட்டத்தில் இருந்து தற்போது செயல்படுத்தி வருவது தெளிவாக தெரிகிறது.
மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் ஊர் ஊராக கத்தித் திரிந்தவர் இப்போது அரசாங்கத்தின் உயர் மட்ட கூட்டங்களில் பிரதான பாத்திரம் ஏற்று கலந்து கொள்கிறார். அதிகாரிகளை மிரட்டுகிறார். கட்டளையிடுகிறார்.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் கூட்டங்களில் அவருக்கு முன்வரிசை வீ பி ஆசனம் வழங்கப்படுகிறது.
மஹிந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு ஞானசார தேரருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கைகளும் தற்போது ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது.வில்பத்து விவகாரத்தில் இருந்து இறக்காமம் மாணிக்கமடு விடயம் வரையில் அவர் தலையிடும் அளவுக்கும் விடயம் கைமீறி போய் உள்ளது.

குடிவரவு திணைக்களத்துக்கு சென்று அவர் வழங்கிய அறிவுரைகளுக்கு அமைய தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களின் வீசா கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.

இனிமேலும் நாம் பொறுமை காக்க கூடாது,பொலிஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் நீதிமன்ற உத்தரவை கிழித்து எரிந்துவிட்டு தைரியமாக உலவும் அளவுக்கு அவருக்கு இந்த நாட்டில் அதிகாரங்களை வழங்கியது யார் என அரசாங்கத்தில் ஒட்டியுள்ள 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கூட்டாக கேள்வி எழுப்ப வேண்டும் என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கோரியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top