கொட்டகல தமிழ் மகா வித்தியாலயம் மற்றும்
ஹற்றன் ஹைலன்ற்ஸ் கல்லூரியின் மாணவர்கள்
ஜனாதிபதியைச் சந்தித்து நன்றி தெரிவிப்பு
கொட்டகல
தமிழ் மகா
வித்தியாலயம் மற்றும் ஹற்றன் ஹைலன்ற்ஸ் கல்லூரியின்
மாணவ, மாணவிகள்
நேற்று (24) முற்பகல்
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களைச்
சந்தித்தார்கள்.
தமது
வேண்டுகோள்களை நிறைவேற்றியமைக்கு ஜனாதிபதி
அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன், தமது பாடசாலைகளில்
நிலவும் குறைபாடுகள்
தொடர்பில் ஜனாதிபதி
அவர்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவர்கள் வருகை தந்திருந்தனர்.
கடந்த
ஜனவரி 21 ஆம்
திகதி தலவாக்லை
தேயிலை ஆராய்ச்சி
நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அவர்கள் பயணித்த உலங்குவானூர்தி
கொட்டகல பகுதியில்
தரையிறக்கப்பட்டபோது ஜனாதிபதி அவர்களைச்
சூழ்ந்துகொண்ட பாடசாலைப் பிள்ளைகள் உள்ளிட்ட பிரதேச
மக்கள் ஜனாதிபதியுடன்
நட்புறவுடன் கலந்துரையாடினார்கள்.
அந்த
பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகள் பற்றி கேட்டறிந்த
ஜனாதிபதி அவர்கள்,
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்தபோது
தமது பாடசாலைகளில்
நிலவும் சுகாதாரப்
பிரச்சினைகள் மற்றும் பல அடிப்படைக் குறைபாடுகள்
பற்றி ஜனாதிபதி
அவர்களிடம் பிள்ளைகள் தெரிவித்திருந்தனர்.
அந்த
வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி
அவர்களால் துரித
நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்காக ஜனாதிபதி
அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே பிள்ளைகள் ஜனாதிபதி
செயலகத்துக்கு வருகை தந்திருந்தனர்.
தமது
ஆக்கங்கள் சிலவற்றையும்
பிள்ளைகள் ஜனாதிபதி
அவர்களிடம் வழங்கினார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.