குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும்
பால் பொருட்கள்
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின்னர், அவர்களின் ஆரோக்கியத்திற்கு பாலைத் தவிர, இதர பால் பொருட்களைக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தியப் பின்னர், அவர்களுக்கு பாலைத் தவிர, இதர பால் பொருட்களைக் கொடுக்கலாமா? கூடாதா? என்ற குழப்பம் பலரது மனதில் எழும். ஆனால் குழந்தைகளுக்கு வேண்டிய எனர்ஜி மற்றும் இதர சத்துக்கள் பால் பொருட்களில் தான் அதிகம் உள்ளது.
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியில் பால் பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகவே அத்தகைய பால் பொருட்களை குழந்தைகளின் உணவில் சேர்க்க யோசிக்க வேண்டாம். இதனால் அவர்களுக்கு கால்சியம், புரோட்டீன் மற்றும் கொழுப்புக்கள் போன்றவை கிடைக்கும்.
இப்போது குழந்தைகளுக்கு பால் பொருட்களில் எவற்றையெல்லாம் கொடுத்தால் நல்லது என்று பார்ப்போம். குறிப்பாக பால் பொருட்களைக் கொடுக்கும் போது, அது சுத்தமான பால் பொருட்களாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அதுவே அவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும்.
பால் பொருட்களில் ஒன்று தான் சீஸ். பொதுவாக சீஸ் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆகவே இதனை உணவுகளில் சேர்த்துக் கொடுக்கலாம். ஆனால் அதிகப்படியான உப்பு உள்ள சீஸைக் கொடுக்கக் கூடாது.
வெண்ணெயில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே கடைகளில் விற்கப்படும் வெண்ணெயை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே செய்து கொடுப்பது சிறந்தது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் தயிர். மேலும் தயிரில் கால்சியம் மற்றும் ப்ரோ-பயோடிக் பாக்டீரியா உள்ளது. ஆகவே இதனைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
நெய் பிடிக்காதோர் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் குழந்தைகளுக்கு நெயின் சுவை பிடிக்கும். ஆகவே அவர்களது உணவில், அவ்வப்போது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதிலும் வீட்டில் செய்த நெய் என்றால் இன்னும் சிறந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.