வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ப அபராதம் விதிக்கும்
புதிய நடைமுறை அறிமுகம்
வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ற வகையில் அபராதத் தொகையை விதிக்கும் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிக வேகமாக வாகனத்தை செலுத்தும் போது விதிக்கப்படும் அபராதம் அந்த வாகனத்தின் வேகத்திற்கு ஏற்ற வகையில் கூடிக் குறையும் வகையில், புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
சாதாரண வாகனமொன்று மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும். அதனை விடவும் வேகமாக பயணிக்கும் போது அபராதம் விதிக்கப்படும்.
மணிக்கு 80 - 90
கிலோ மீற்றர் வேகத்தில் சென்றால் ஒரு அபராதத் தொகையும், மணிக்கு 90 -100
கிலோ மீற்றர் வேகத்தில் சென்றால் அதற்கு ஒரு அபராதத் தொகையும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாள் தோறும் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்வதாகவும், வாகன விபத்துக்களை தவிர்க்க இவ்வாறு கூடுதல் அபராதம் விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டி உள்ளிட்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வேகக் கட்டுப்பாட்டை மீறி கூடுதல் வேகத்தில் வாகனங்கள் செலுத்தப்பட்டால் அதன் வேகத்திற்கு அமைய அபராதத் தொகை அறவீடு செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இதேவிதமாக அபராதத் தொகை அறவீடு செய்யப்பட உள்ளது.
0 comments:
Post a Comment