கொழும்பு மாநகர சபையின் கழிவுப்பொருட்களை
அப்புறப்படுத்துவதற்காக சுகாதார முறையிலான
குப்பை நிரப்பும் நிலத்தை நிர்மாணிப்பதற்கு
தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக
அமைச்சரவை அங்கீகாரம்
கொழும்பு மாநகர சபையின் கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சுகாதார முறையிலான குப்பை நிரப்பும் நிலத்தை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக
மாகாண சபைகள் மற்றம் உள்ளூராட்சி அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, மாநகர சபைகள் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு போன்ற அமைச்சுக்களின் செயலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் கழிவு முகாமைத்துவ ஆய்வுப்பிரிவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை கவனத்திற் கொண்டு,
வத்தளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உஸ்வெடிகெய்யாவ, முதுராஜவெல பிரதேசத்திலுள்ள அரசாங்கத்துக்கு சொந்தமான 05 ஏக்கர் நிலப்பகுதியில் நாளொன்றுக்கு 400 மெட்ரிக் தொன் அளவிலான கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்காக சுகாதார முறையிலான குப்பை நிரப்பும் நிலத்தை நிர்மாணிப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டது.
2017ம் ஆண்டுக்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை பயன்படுத்தி குறித்த வேலைத்திட்டத்தை துரித கதியில் மேற்கொள்வது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 comments:
Post a Comment