ஜனாதிபதியையும் துறைசார் அமைச்சரையும் அழைத்து
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா!
கல்முனைப் பிரதேசத்தில் எல்லா வைபவங்களிலும்
ஒரு முகமே மக்கள் தெரிவிப்பு !!!!
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பான முறையில் நேற்று 29 ம் திகதி காலை பத்து மணியளவில் மேன்மை தங்கிய அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரிய வசம் ஆகியோர்களின் பங்குபற்றுதளுடன் ஆரம்பமானது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கண்காட்சி கூடங்களையும் பார்வையிட்டார். அத்துடன், பாடசாலை அதிபர் MA.ஹலீம் இஸ்ஹாக் அவர்களினால் பாடசாலையின் நினைவுச்சினமும் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு கல்வி
அமைச்சரால முஸ்லிம் மாணவிகள் தொடர்பாக சந்தோஷமான் அறிவிப்புக்களும் விடுக்கப்பட்டன
இவ்வாறு துறைசார் அமைச்சரை அழைத்து வைபவங்கள் நடத்துவது குறித்து மட்டக்களப்பு
பிரதேச கல்வியாளர்களை மக்கள் பாராட்டுகின்றார்கள்.
இதேவேளை. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் இவ்வாறு துறைசார் அமைச்சர்களை அழைத்துவராமையே அம்பாறை கரையோரப் தேசம் அபிவிருத்தியில் பின்னடைவுக்கு காரணம் என மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிப்பதற்கும், கட்டங்களை திறந்து கையளிப்பதற்கும் அந்தந்த துறைசார் அமைச்சர்களை அழைத்து வருவதற்கு எமது அரசியல்வாதிகள் தயக்கம் காட்டுவதே இப்பிரதேசங்கள் அபிவிருத்தியில் பின்னடைந்திருப்பதற்கு பிரதான காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனையிலும் சனிக்கிழமை பொத்துவிலிலும் பல கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன. ஆனால் இத்திறப்பு விழாக்களுக்கு துறைசார் அமைச்சர்கள் எவரும் அழைக்கப்படாமல் ஒரு முஸ்லிம் அரசியல்
கட்சியின் தலைவரே சகல அடிக்கற்களை நட்டதுடன்
கட்டடங்களையும் திறந்து வைத்தார் என மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலைகளில் கட்டடங்கள் திறக்கப்பட வேண்டியிருந்தால் இச்சந்தர்ப்பத்தை பாவித்து கல்வி அமைச்சரை இப் பிரதேசத்திற்கு அழைத்து வந்து அவர் மூலமாக அடிக்கற்களை நட்டியும் கட்டடங்களைத் திறக்க வைத்தும் அவரை கெளரவித்து இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளுக்கு மேலும் பல உதவிகளை அவரிடம் பெற்றுக் கொண்டிருக்க முடியும். அது மாத்தியரமல்லாமல் இப் பிரதேசங்களிலுள்ள குறைபாடுகளை அமைச்சருக்கு பாதிக்கப்பட்டவர்களால் நேரடியாக எத்தி வைக்கவும் சந்தர்ப்பம் ஏற்படும் இதற்கு எமது அரசியல்வாதிகள் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதாக இல்லை என மக்களால் கவலை வெளியிடப்படுகின்றது.
உண்மையில் ஓட்டாமவடி மக்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
0 comments:
Post a Comment