முஸ்லிம் குழந்தைகளுக்குப்
பெயர் சூட்டுவது தொடர்பாக
சீனாவில் புதிய
அறிவிப்பு
சீனாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் தங்களது குழந்தைகளுக்கு இஸ்லாம், சதாம், ஹஜ், குர்ஆன் உள்ளிட்ட பெயர்களை சூட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இவர்கள், ஐஎஸ் தீவிரவாதிகள், தலிபான்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் கைகோர்த்துக் கொண்டு, சீனாவுக்கு எதிராகச் செயல்படுவதாக, அந்நாடு குற்றம்சாட்டிவருகிறது.
குறிப்பாக, ஜின்ஜியாங் மாகாணத்தை, தனி நாடாகப் பிரிக்கவும் அங்குள்ள உய்குர் மக்கள் கோரிக்கை எழுப்புகின்றனர்.
இதனால், அவர்கள் மீது சீனா அரசி கடும் கட்டுப்பாடுகளை விடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது முஸ்லிம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில்,இஸ்லாம், குர்ஆன், மக்கா, ஜிஹாத், இமாம், சதாம், ஹஜ், மதினா உள்ளிட்ட பெயர்களை யாரும் குழந்தைகளுக்கு சூட்டக்கூடாது என்று, சீனா தடை விதித்துள்ளது.
இத்தகைய பெயர்கள், மதவாதச் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது.
இந்த பெயர்கள் வைக்கப்பட்ட குழந்தைகள் சீன பாடசாலைகளில் படிப்பதற்கு அனுமதி கிடையாது எனவும் சீனா உறுதியாக கூறிஉள்ளது.
இதனால் உய்குர் மக்கள் கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment