வில்பத்து பிரதேசத்தில் மக்கள் குடியிருப்பு காணிகளை
ஜனாதிபதியுடன் பேசி விடுவித்துக் கொடுப்பதற்கான
முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
வில்பத்து
பகுதியை அண்டிய
பிரதேசத்தில், 30 வருடங்களாக மக்கள் குடியிருக்காத காரணத்தினால்
வனபரிபாலனத் திணைக்களத்தினால் பாதுகாப்பு
வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள
மக்கள் குடியிருப்பு
காணிகளை, ஜனாதிபதி
மற்றும் அமைச்சரவை
மட்டத்தில் பேசி அதனை விடுவித்துக் கொடுப்பதற்கான
முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர்
ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
வில்பத்து
விவகாரம் தொடர்பில்
கடந்த 03ஆம்
திகதி ஜனாதிபதி
செயலாளரை சந்தித்ததன்
பிற்பாடு சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் விசேட செயலமர்வு ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
தலைமையில் இன்று
வியாழக்கிழமை (27) முசலி பிரதேச
செயலகத்தில் நடைபெற்றது. அதில் கருத்து தெரிவிக்கும்போதே
அமைச்சர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
பேராதனை
பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் ஹஸ்புல்லா மற்றும்
விரிவுரையாளர் நௌபல் ஆகியோர் வில்பத்து மற்றும்
புதிய வனமாக்கள்
தொடர்பில் தெளிவான
விளக்கங்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்கள்.
புத்தளம் மற்றும்
அனுராதபுரம் மாவட்டங்களை அண்டிய வில்பத்து காட்டுப்
பகுதியே அழிக்கப்பட்டிருக்கிறது
தவிர, மன்னார்
மாவட்டத்தை அண்டிய வில்பத்து காட்டுப்பகுதி அழிக்கப்படவில்லை.
மக்கள்
குடியிருப்புள்ள மன்னார் மாவட்டத்தின் மறிச்சுக்கட்டி, கரடிக்குழி,
பாலக்குழி, கொண்டச்சி போன்ற பிரதேசத்தில் எவ்விதமான
காடழிப்பும் நடைபெறவில்லை என்பதை அவர்கள் வன
பரிபாலன திணைக்கள
அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்
மற்றும் கடற்படை
அதிகாரிகளுக்கு தெளிவாக சுட்டிக்காட்டினார்கள்.
0 comments:
Post a Comment