வேலையற்ற பட்டதாரிகள் மாகாணசபையினை
முற்றுகையிட்டு போராட்டம்!
அனுமதி கிடைத்ததும் நியமனங்கள் வழங்கப்படும்
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவிப்பு
மத்திய
அரசின் அனுமதி
கிடைத்ததும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள்
வழங்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர்
ஹாபீஸ் நசீர்
அகமட் தெரிவித்துள்ளார்.
இந்த
நிலையில் திருகோணமலை மற்றும் அம்பாறை
பட்டதாரிகளுடன் இணைந்து வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (25 மாகாணசபையினை முற்றுகையிட்டு
போராட்டம் நடத்தியுள்ளனர்.
மாணவர்களின்
முற்றுகை காரணமாக
கிழக்கு மாகாணசபையின்
செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இதனை
தொடர்ந்து பொலிஸாரினால்
திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் குறித்த ஆர்ப்பாட்டத்துக்க
தடையுத்தரவு வழங்குமாறு மனுதாக்கல் செய்யப்பட்டது.
பொதுமக்களுக்கு
இடையூறு ஏற்படுத்தாமல்,பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல் அவர்கள் போராட்டம்
நடத்தலாம் என
நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த
நிலையில் பட்டதாரிகளில்
சிலரை அழைத்து
கிழக்கு மாகாண
முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் பேச்சுவார்த்தைகளை
மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு
மாகாணத்தில் இருந்து பட்டதாரிகளின் விபரங்கள் மத்திய
அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதன்
காரணமாக மத்திய
அரசு அனுமதியளிக்கும்
பட்சத்தில் உடனடியாக நியமனம் வழங்க நடவடிக்கையெடுப்பதாக
முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment