மீதொட்டமுல்ல பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு
வீடுகள் வழங்கும் பணி ஆரம்பம்
மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்து விழுந்ததினால் பாதிக்கப்பட்ட 60 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.
இடர்முகாமைத்துவ அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அனர்த்த அபாய வலயத்திற்குள் உள்ள மக்களுக்கு 3 மாதகாலம் வரையில் மாதம் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும் வீட்டுத்தளபாடங்களை எடுத்துச் செல்வதற்கு மேலதிகமாக போக்குவரத்து செலவாக 10ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு வீடுகளை வழங்குதல் அல்லது வீடுகளைப் பெறவிரும்பாதோருக்கு தேவையான நஷ்ட ஈடுகளை வழங்குவது தொடர்பிலும் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.
இந்த பகுதி பாரிய நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இதன்பின்னர் இப்பிரதேசத்திற்கும் எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கழிவுகள் மீள் சுழற்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான நட்புறவை உறுதிசெய்யும் வகையில் ஜப்பான் குழுவினர் இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கும் வகையில்; இங்கு வந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட வீடுகள் தொடர்பான மதிப்பீடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் எதிர்வரும் 3 தினங்களுக்குள் பூர்த்தி செய்யயப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த வீடுகளுக்கான நஷ்டஈடு மதிப்பீட்டு நடவடிக்கை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும்.
அனர்த்தத்தை தொடர்ந்து நலன்புரி இடங்களில் தங்கியிருந்த குடும்பங்களுள் 60 குடும்பங்கள் இன்று வெளியேறுகின்றனர். எஞ்சியுள்ளோர்கள் தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை அளவில் இவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
.
0 comments:
Post a Comment