வங்காளதேசத்தில் 560 பள்ளிவாசல்களை
கட்டும் சவூதி அரேபியா
வங்காளதேசத்தில் 560 பள்ளிவாசல்களை கட்டும் சவூதி அரேபியா இதற்காக(
$118 million) 118 மில்லியன் டொலர்களை செலவிடுவதாக வங்க தேச திட்ட அமைச்சர் முஸ்தபா
கமால் தெரிவித்துள்ளார்.
வங்காள தேச ஜனாதிபதி ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு சவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
அப்போது சவூதி அரேபிய மன்னரை சந்தித்த அவர், வங்காள தேசத்தில் பல்வேறு இடங்களில் பள்ளிவாசல்களை கட்டுவதற்கு சவூதி அரேபியா உதவ வேண்டும் என்று கேட்டு கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட மன்னர் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு உதவ முன்வந்துள்ளார்.
அதன்படி( $118 million) 118 மில்லியன் டொலர்கள் அளவுக்கு பண உதவியை சவூதி அரேபியா செய்ய உள்ளது. இந்த பணத்தை கொண்டு 560 பள்ளிவாசல்கள் கட்டப்பட உள்ளன.
நாட்டில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் இந்த பணம் மூலம் பள்ளிவாசல்கள் கட்டப்பட இருக்கிறது. இந்த தகவலை வங்க தேச திட்ட அமைச்சர் முஸ்தபா கமால் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment