தொழுகை கற்றுத் தரும் தலைமைத்துவத்தை
பின்பற்றினால் சமூகம் பலம்பெறும்
மிஃராஜ் தின நிகழ்வில் அமைச்சர் ஹலீம்
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
மிஃராஜ்
இரவில் இடம்பெற்ற
விண்ணுலக யாத்திரையின்
மூலமாகக் கிடைத்த
தொழுகை கற்றுத்
தருகின்ற
தலைமைத்துவத்தைப் பின்பற்றி நடப்பவர்களாக
எம்மை மாற்றிக்
கொள்ள முடியுமானால்
நிச்சயமாக பலம்
பொருந்திய சக்தியாக
எங்களால் இயங்க
முடியும் என
தபால் மற்றும்
தபால் சேவைகள்
முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் அமைச்சர் எம். எச். ஏ.
ஹலீம் தெரிவித்தார்.
முஸ்லிம்
சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம்
சேவையும் இணைந்து
மருதானை ஜும்ஆப்
பள்ளியில் திங்கள்
இரவு புனித
மிஃராஜ் இரவை
அனுஷ்டித்தது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து
கொண்டு உரையாற்றும்
போதே அமைச்சர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முஸ்லிம்
சமய பண்பாட்டலுவல்கள்
திணைக்களப் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.ஆர்.எம்.
மலிக் தலைமையிலும்
கலாசார அபிவிருத்தி
உத்தியோகத்தர் அஷ்- ஷெய்க் எம்.எம்.எம். முப்தி
நளீமியின் ஒருங்கிணைப்பிலும்
நடைபெற்ற இந்நிகழ்வில்,
அமைச்சர் அங்கு
மேலும் தெரிவிக்கையில்,
மிஃராஜ்
எனப்படும் விண்ணுலக
யாத்திரை நபி
(ஸல்) அவர்களது
வாழ்க்கையிலே ஒரு முக்கிய சம்பவம் என்பதை
நாங்கள் எல்லோரும்
அறிவோம். மிஃராஜ்
தினத்தை நினைவு
கூரும் நாம், மிஃராஜ்
பயணத்தில் நடைபெற்ற
சம்பவங்களை எமது வாழ்க்கையில் ஒரு படிப்பினையாக ஏற்றுக்கொள்ள
வேண்டும்
நபி
(ஸல்) அவர்கள்
மிஃராஜ் சென்ற
அந்த கால
கட்டம் மிகவும்
சோகம் நிறைந்த
கால கட்டமாக
இருந்தது என்பதை
நாங்கள் ஹதீஸ்களின்
மூலம் அறிவோம்.
அதாவது தனது
அன்பு மனைவி
கதீஜா நாயகியை
இழந்து, இஸ்லாத்துக்காக
பல வழிகளிலும்
உதவி புரிந்த
அபூதாலிபை இழந்து
கவலையில் இருந்த
அந்த காலகட்டத்திலே
அல்லாஹ்வின் அழைப்பின் படி ஜிப்ரீல் (அலை)
உடன்
ஹரத்திலிருந்து பைத்துல் முகத்தஸ்ஸுக்கு
அழைத்துச் செல்லப்பட்டு
அங்கிருந்து புறாக் எனும் வாகனத்தின் மூலம்
7 வானங்களையும் கடந்து அல்லாஹ்வின் அர்ஷ் எனும் சன்னிதானத்தை
அடைந்தார்கள் என்று அறிகிறோம்.அந்த மிஃராஜ்
பயணத்திலே எமக்குக்
கிடைத்த மிகப்
பெரும் பரிசாக
ஐம்பெரும் கடமைகளில்
இரண்டாதாக இருக்கும்
தொழுகையை பெற்றுக்
கொண்டதாகவும் அறிகிறோம்.
மேலும்
7 வானங்களைச் கடந்து சென்ற நேரத்திலே அங்கே
பல அதிசயங்களைக்
கண்டதாக ஹதீஸ்களில்
படித்திருக்கிறோம்.
அந்தப் பயணத்திலே ஈஸா
(அலை) மற்றும்
நபிமார்களைச் சந்தித்ததாகவும், சுவர்க்கம்,
நகரம் போன்றவற்றைக்
கண்டதாகவும், மனிதர்கள் தமது வாழ்நாளில் புரிகின்ற
பாவங்களுக்கு மறுமையிலே கொடுக்கப்படும் தண்டனைகளைக் கண்டதாகவும்
ஹதீஸ்களின் மூலம் அறிய வருகிறோம்.
இந்தப் பயணத்தின் மூலம்
எமக்குக் கிடைத்த
மிகப் பெரும்
பாக்கியமான தொழுகையை இந்த மிஃராஜ் தினத்தில்தான்
பெற்றுக் கொண்டோம்.
தொழுகை முதலில்
50 ரக்ஆத்துக்களாக வழங்கப்பட்ட போதும்
அது படிப்படியாகக்
குறைக்கப்பட்டு 5 ரக்ஆத்துக்களாக பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அந்த ஐந்து ரக்ஆத்துகளை சரிவர
நிறைவேற்றினால் 50 ரக்ஆத்கள் தொழுத
நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும்
ஹதீஸ்கள் கூறுகின்றன.
எம்மைப்
பொறுத்தவரையில் தொழுகை என்பது பல நற்பண்புகைளை
எமக்கு ஏற்படுத்தும்
ஒரு விடயம். ஓர் இமாமைப் பின்பற்றி
தொழும் போது
நாங்கள் தலைமைத்துவத்தை
ஏற்று நடக்கும்
பயிற்சியை தொழுகையின்
மூலமாகப் பெற்றுக்
கொள்கிறோம். எமக்கிடையே
எமது மார்க்கத்திலே
விசேடமாக வலியுறுத்திக்
கூறப்படும் விடயம்தான் ஒற்றுமை. இன்று ஒற்றுமை
இன்றி பிரிந்து
பிரிந்து செயற்படுவதன்
காரணமாக
நாங்கள் பல பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றோம்.
எனவே தொழுகை கற்றுத்
தருகின்ற
தலைமைத்துவத்தைப் பின்பற்றி நடப்பவர்களாக
எம்மை மாற்றிக்
கொள்ள முடியுமானால்
நிச்சயமாக எங்களுக்குள்ளே
பலம் பொருந்திய
யாராலும் அசைக்க
முடியாத சக்தியாக
எங்களால் இயங்க
முடியும் என்பதை
நான் கூறிக்
கொள்ள விரும்புகிறேன்.
அடுத்து,
இந்த நேரத்திலே
கூறும் மிக
முக்கியமான விடயம், இந்த மிஃராஜ் பயணம்
ஜிப்ரீல் (அலை)
மூலம் ஹரத்திலிருந்து
பைத்துல் முகத்தஸ்ஸுக்கு
அழைத்து செல்லப்பட்டு
அங்கு இருந்துதான்
புறாக் வாகனத்தின்
மூலமாக மிஃராஜ்
சென்றதாக நாங்கள்
அறிகிறோம்.
ஆனால்
இன்று பைத்துல்
முகத்தஸ் முஸ்லிம்கள்
வசம் இல்லை.
இந்த புனித
பூமி வேறு
மதத்தின் கீழ்
இருப்பதை நாங்கள்
அறிவோம். இந்த
தருணத்திலே உலக முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று
கூடி பைத்துல்
முகத்தஸை, அந்த
புனித ஸ்தலத்தை
மீட்டுக் கொள்வதற்கு
எல்லா முயற்சிகளையும்
மேற்கொள்ள வேண்டும்.
விசேடமாக இலங்கை
முஸ்லிம்களாகிய நாங்கள் அந்தப் புனித பூமியை
மீளப் பெற்றுக்
கொள்வதற்கு ஒவ்வொரு நாளும் தொழும் 5 வேளை
தொழுகைகளிலும் துஆப் பிராத்தனை செய்ய வேண்டும்
என்று கேட்டுக்
கொள்கிறேன். என்றும்
தெரிவித்தார்.
நிகழ்வில்,
முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்- ஷெய்க்
எம்.ஆர்.எம். மலிக்,
உதவிப்பணிப்பாளர்களான எம். எல்.
ஏ. அன்வர் அலி, எம்.எச். நூறுல்
அமீன் மௌலவி,
கலாசார அபிவிருத்தி
உத்தியோகத்தர் அஷ்- ஷெய்க் எம்.எம்.எம். முப்தி
நளீமி, மருதானை
ஜும்ஆ பள்ளிவாசல்
தலைவர் எம்.
ஏ. நவாஸ்
கபூர், செயலாளர்
எம். நௌபர்
பாரி இணைச்
செயலாளர்களான உவைஸ் அஹமட், ஹுசைன் முஹம்மட்,
பள்ளிபரிபாலன சபைத் தலைவர் எம். ஏ.
எம். நுஸ்கி,
பள்ளிபரிபாலன முகாமைத்துவ உறுப்பினர் எம். என்.
எஸ். அப்துல்
காதர், கொழும்பு
ஸாஹிராக் கல்லூரி
அதிபர் றிஸ்வி
மரிக்கார், தொழிலதிபர்
முஸ்லிம் ஸலாஹுதீன்
மற்றும் மத்ரஸா
மாணவர்கள், ஜமாஅத்தினர்கள், நலன்விரும்பிகள்
எனப் பலரும்
கலந்து கொண்டனர்.
நிகழ்வில்
இஸ்லாஹிய்யா அரபிக் கல்லூரியின் அதிபர், அஷ்-
ஷெய்க் பஸ்லுல்
பாரியால் பயானும்,
அல்-ஹாபிழ்
எம். எஸ்.
ஏ. அர்ஷாதினால்
கிராஅத்தும், நாட்டுக்காகவும்,
நாட்டுமக்களின் பாதுகாப்புக்காகவும் பொறுப்புடன்
சேவையாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவுக்கும்
மற்றும் அமைச்சர்களும்,
சகல பாராளுமன்ற
உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும், நாட்டின் சகல இன மக்களும் சரீர
சௌபாக்கியங்களுடன் வாழ எம். எச்.
தாஸிம் மௌலவியால், துஆப் பிராத்தனையும் செய்யப்பட்டது.
இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை அறிவிப்பாளர் எஸ்.எச்.எம்.
றீஷா நிகழ்வை
தொகுத்து வழங்கினார்.
0 comments:
Post a Comment