எரிபொருள் விநியோகம் வழமை போன்று
முன்னெடுக்கப்படும்
இந்தியன் ஓயில் நிறுவனம் (
IOC) அறிவிப்பு
வழமை போன்று தமது நிறுவனம் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் என இந்தியன் ஓயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ள நிலையிலேயே இந்தியன் ஓயில் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு பூராகவும் உள்ள தமது நிறுவனத்துக்குச் சொந்தமான 202 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக நாட்டின் எரிபொருள் தேவையில் 18 வீதத்தை தம்மால் நிவர்த்தி செய்ய முடியும் என அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட உபத் தலைவர் பீ.பீ.பவித்ரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தியன் ஒயல் நிறுவனத்திடம் தற்போது 20 ஆயிரம் கிலோ லீற்றர் டீசலும், 11 ஆயிரம் கிலோ லீற்றர் பெற்றோலும் காணப்படுகிறது. இவற்றை கொண்டு 15 நாட்கள் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில் ஒரு வார காலத்திற்குள் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் பெற்றுத்தர முடியும் எனவும் இந்தியன் ஓயில் நிறுவனத்தின் சிரேஷ்ட உபத் தலைவர் பீ.பீ.பவித்ரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment