கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் சார்பில்

குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உபகுழுவிற்கு

முறைப்பாடுகளை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

2005ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடையூறுகள் , பாதிப்புக்களால் மற்றும் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பான அமைச்சரவை உபகுழுவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் தமது முறைப்பாடுகளை மே மாதம் 1ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.
பாராளுமன்ற மறுசீரமைப்ப மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
2005ம் ஆண்டுக்கும் 2015ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் சார்பாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது அமைப்புக்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையின் உபகுழுவின் செயற்பாடுகள் குறித்து இதன்போது விளக்கமளித்த அமைச்சர் , குறிப்பிட்ட காலப்பகுதியில் கொல்லபட்ட ஊடகவியாலளர்கள் சார்பில் முறைப்பாடுகள் சமர்ப்பிப்பது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தமது முறைப்பாடுகளை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலமாக பின்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்கமுடியும்.
அவற்றின் விபரங்கள் பின்வருமாறு
 முகவரி :
அமைச்சரவை உபகுழுவின் செயலாளர்,
அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் ,
அராசங்க தகவல் திணைக்களம் , இல-163 , கிருலப்பனை ஓழுங்கை கொழும்பு 05
தொலைநகல்  - 011 251 4753

மின்னஞ்சல்    - ranga@dgi.gov.lk


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top