பொது போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக
பஸ் சேவைகளை மேம்படுத்துவதற்கு
அமைச்சரவை அங்கீகாரம்
2017ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் திகதி முதல் 23ம் திகதி வரையான காலப்பகுதியினுள் பாராளுமன்ற வீதியில் ராஜகிரிய சந்தியிலிருந்து ஆயுர்வேத சந்திவரை கொரியா சர்வதேச இணைவாக்க முகாமையகத்தின் தொழில்நுட்ப உதவியினை பெற்று முன்னோடி பஸ் போக்குவரத்து கருத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இவ்ஒத்திகை சிறந்த முறையில் திட்டமிடப்பட்டதுடன், பெறுபேறுகள் அறிவியல்சார் செயல்முறை கையாளுவதன் மூலம் அளவிடப்பட்டன.
மேலும் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள இலகு ரக புகையிரத போக்குவரத்து மற்றும் புகையிரத இலத்திரனியல் மயப்படுத்தல் ஆகிய வேலைத்திட்டங்களை முடிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், துரித தீர்வொன்றாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்மொழியப்பட்ட பின்வரும் தீர்வுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• அலுவலக நேரங்களில் கீழ்க்காணும் வீதிகளில் பஸ் போக்குவரத்துக்கு முன்னுரிமை ஊடுவழியினை அமைத்தல்,
- காலி வீதியில், மொரட்டுவையிலிருந்து இரத்மலானை வரை மற்றும் வெள்ளவத்தை பாலத்திலிருந்து கொள்ளுபிட்டி வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பஸ்களுக்கான முன்னுரிமை ஊடுவழி
- பாராளுமன்ற வீதியில், பாராளுமன்ற சந்தியிலிருந்து ராஜகிரிய, பொரளை, மருதானை மற்றும் புறக்கோட்டையினூடாக கொழும்பு கோட்டை வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பஸ்களுக்கான முன்னுரிமை ஊடுவழி
- கொழும்பு, சித்தம்பலம் ஏ. காடினல் மாவத்தையிலுள்ள விமானப்படை சந்தியிலிருந்து புறக்கோட்டை வரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பஸ்களுக்கான முன்னுரிமை ஊடுவழி
- துங்முல்ல சந்தியிலிருந்து நூதனசாலை சந்திவரை கொழும்பை நோக்கி பயணிக்கும் பஸ்களுக்கான முன்னுரிமை ஊடுவழி
- நகர மண்டபத்திலிருந்து துங்முல்ல சந்தி வரை கொழும்பிலிருந்து வெளியில் பயணிக்கும் பஸ்களுக்கான முன்னுரிமை ஊடுவழி
• பாரம்பரிய பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டி இறக்குமதி செய்வதற்காக வரிச்சலுகை வழங்குவதற்கு பதிலாக, சலுகை கடன் முறையின் மூலம் காற்று சீரமைப்பினைக் கொண்ட போக்குவரத்து பஸ் இறக்குமதியினை விருத்தி செய்தல்.
• பஸ்களில் இலத்திரனியல் அட்டைகளை பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் முறைமையினை அறிமுகம் செய்தல்
• முச்சக்கர வண்டிகள், வாடகை வண்டிகளுக்கான தரிப்பிடங்களை நவீனமயப்படுத்தல்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.