மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம்

ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றிணை

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிப்பு

 முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் அபகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானி பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரியும், முள்ளிக்குளம் மக்களின் நிலங்களில் இருந்து கடற்படை வெளியேற்றப்பட வேண்டும் என கோரியும் மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் இன்று 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றிணை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளித்துள்ளனர்.
மன்னார் ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளர் மௌவி எஸ்..அசீம் தலைமையில்,மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனம் தலைவர் அப்துல் அசீஸ் மற்றும் சம்மேளன உறுப்பினர்கள் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இந்த  மகஜரை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரை கையளித்த நிலையில் மன்னார் ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளர் மௌவி எஸ்.ஏ.அசீம், ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
மன்னார் தீவு பள்ளிவாயில்களின் சம்மேளனத்தின் ஊடாக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மறிச்சிக்கட்டி, கரடிக்குழி, பாலைக்குழி,முள்ளிக்குளம்,சிலாபத்துறை போன்ற பகுதிகளில் மக்களின் குடியிருப்பு நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக இந்த பிரதேசத்தில் மக்களின் பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக் காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். மக்கள் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னர் எவ்வாறு இந்த பிரதேசத்தில் வாழ்ந்து வந்தார்களோ அவ்வாறே அவர்கள் சுதந்திரமாக வாழவேண்டும்.

புதிய வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதனை வழியுறுத்தி ஜனாதிபதிக்கு கையளிக்கும் வகையில் மகஜர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் ஜம்இய்யத்துல் உலமா சபை செயலாளர் மௌவி எஸ்..அசீம் குறிப்பிட்டுள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top