திவுரும்பொல ஜாமியா மனாருல் ஹுதா
அரபிக் கலாசாலையின்
16வது பட்டமளிப்பு விழா
திவுரும்பொல
ஜாமியா மனாருல்
ஹுதா அரபிக்
கலாசாலையின் 16வது பட்டமளிப்பு விழாவில் அகில
இலங்கை மக்கள்
காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்
பிரதம அதிதியாக
இன்று 22 ஆம் திகதி சனிக்கிழமை கலந்து கொண்டார்.
இக்கல்லூரியின்
அதிபர் அஹமட்
ஹலாலுடீன் மிஸ்பாஹி
தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா, அகில
இலங்கை ஜம்இய்யதுல்
உலமாவின் செயலாளர்
முபாரக் மௌலவி,
முன்னாள் மாகாணசபை
உறுப்பினர் நசீர் மற்றும் நாட்டின் பல்வேறு
பகுதிகளிலுள்ள அரபிக் கலாசாலைகளின் அதிபர்கள், பெற்றோர்கள்
உட்பட பலர்
கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment