ஒரு நாளைக்கு 40 சிகரெட் ஊதித்தள்ளிய 2 வயது சிறுவன்

தற்போது 9 வயதை எட்டியுள்ள அவன் என்ன செய்கிறான்?

இந்தோனேசியாவைச் சேர்ந்த Ardi Rizal என்ற 2 வயது சிறுவன் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கும் 40 சிகரெட் குடிக்கிறான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது.
தொடர்ந்து சிகரெட் குடித்து வந்ததால் அவனுக்கு அதிகமான பசி ஏற்பட்டது, இதனால் அவனது உடல் எடையும் அதிகரித்தபடி இருந்தது.
இதனால் மிகவும் சோகத்தில் இருந்த Ardi Rizal குடும்பத்திற்கு, இந்தோனேசியா அரசு உதவ முன்வந்தது.
இதன்படி சிறுவனுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் 24 கிலோ எடை குறைந்ததுடன் சிகரெட் பழக்கத்தையும் முற்றிலுமாக நிறுத்தினான். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.
இந்நிலையில் அச்சிறுவன் உடல் எடை குறைத்து சாதித்து காட்டியது மட்டுமின்றி பள்ளிகளிலும் தன்னை ஒரு சிறந்த மாணவன் என்று நிரூபித்து வருகின்றான்.
தற்போது 9 வயதை எட்டியுள்ள Ardi Rizal பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் என்ற பெயரை பெற்றுள்ளான். அதுமட்டுமின்றி தன் வகுப்பில் நான்காவது ரேங்க் எடுத்து படிப்பில் அசத்தி வருகிறான்.
மேலும் ஆசிரியர்கள் Ardi Rizal- பள்ளியில் ஒரு முதன்மையான மாணவன் என்றும் மற்ற மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளான் என்று புகழ்ந்து கூறுகின்றனர்.

Two-year-old who smokes 40 cigarettes a day puffs away on a toy truck
By Mail Foreign Service
CREATED: 11:07 BST, 26 May 2010 DailyMail

·          








0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top