கிழக்கு மாகாண கல்விமைச்சின் பணம் வீண்விரயம்

(அபூ முஜாஹித்)


கிழக்கு மாகாணத்தில் கல்விக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியில் உரியவர்களுக்கு உரிய பொறுப்புக்கள் வழங்கப்படாது வீண் விரயம் செய்யப்பட்டு வருவது குறித்து கிழக்கு மாகாண கல்வித்துறை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை கல்வி வலயத்திலேயே இந்நிதி  விரயமும், பொதுமக்களின் வரிப்பணம் வீண்விரயம் செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கையில் பாடசாலை நிருவாகமும் மற்றும் வலயக்கல்வி நிருவாகமும் மொழி மூலம் நடைபெற்று வருகையில் அம்பாறை கல்வி வலயம் சிங்கள மொழி மூலமான ஒரு கல்வி வலயம் எனத்தெரிந்திருந்தும் தமிழ்மொழி மூலம் கடமையாற்ற நியமிக்கப்பட்ட இலங்கை கல்வி நிருவாக சேவை சிரேஸ்ட அதிகாரியொருவர் அங்கு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இவர் அங்கு எவ்வித கடமையுமின்றி மாதாந்த சம்பளத்தைப் பெற்று வருகிறார் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இது போன்று, தமிழ் மொழி பேசும் மாணவர்கள் எவருமற்ற அம்பாறை தமிழ் மகா வித்தியாலய அதிபருக்கும், ஆசிரியருக்கும் கற்பித்தலின்றி, மாணவர்களின்றி, நிருவாகமின்றி மாதாந்தம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண ஆளுனரது வாசஸ்தலம் அம்பாறை கல்வி வலயத்தில் உள்ளது. இங்கு ஆளுனர் முதல் அதிகாரிகள் எவரும் தங்குவதுமில்லை, ஆளுனர் மாளிகை பயன்படுத்தப்படுவதுமில்லை. இதற்கென ஒரு காப்பாளர் உள்ளார். இவருக்கான சம்பளமும், பராமரிப்புச் செலவும் கிழக்கு மாகாண சபையால் வழங்கப்பட்டு வருகிறது.

அம்பாறை வலயக்கல்விப் பணிப்பாளருக்கான உத்தியோகபூர்வ குடிமனை கிழக்கு மாகாண முன்னாள் கல்வியமைச்சரும், கூட்டு எதிராணி பாராளுமன்ற உறுப்பினருமான ஒருவரால் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டு அவரது அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பராமரிப்புச் செலவும் கிழக்கு மாகாணக்கல்வியமைச்சால் வழங்கப்படுகிறது.
இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண ஆளுனர் முதல் கல்வியமைச்சர் வரை மற்றும் கிழக்கு மாகாணக் கணக்காய்வுத் திணைக்களம் என்பன இருப்பதுதான் கிழக்கு மாகாண நல்லாட்சியின் கொள்கையா? என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top